Sunday, April 10, 2011

அஇஅதிமுக. பொதுசெயலாளர் மனுசெய்த நேரப்படி எமது ஜோதிட ஆய்வு

 வணக்கம் அன்பர்களே.அஇஅதிமுக.வின் பொதுசெயலாளர் மனுசெய்த நேரப்படி எமது ஜோதிட ஆய்வு   ஜூ.வி.10/04/2011.இதழில் வெளிவந்துள்ளது.அதனை நமது வலைப்பூவில் அளித்துள்ளேன். 

மனுதாக்கள் செய்தது 20/03/2011காலை 11.03 மணி.
எப்போதுமே தலைவர்களை வைத்துத்தான் பிரசன்னம் பார்ப்பது வழக்கம். அதுபோல்
அவர்கள் ஓட்டுபதிவு நேரம் கொண்டு தான் வெற்றி,தோல்வி உறுதி
செய்யபடுகிறது. பிரபலமானவர்கள் தமது உண்மையான பிறப்பு ஜாதகத்தை
ஜோதிடர்களிடம் காட்டுவதில்லை.வருடம்,மாதம்,தே
தி சரியாக இருக்கும் ஆனால்
பிறந்தநேரம் மட்டும் மாற்றி கணீக்கப்பட்ட ஜாதகத்தை கொண்டே பலன் கேட்டு
வருவதால் தான் நான் இவர்களுக்கு பிரசன்ன ஜோதிடம் மூலம் பலன்
சொல்லிவருகிறேன்.
ஜெ.ஜெ.மனுதாக்கல் செய்தபோது உள்ளகிரக நிலை


லக்னம்....ரிஷபம்/கன்னி.
ராசி............விருச்சிகம்/துலாம்/அனுசம்
 
மனுதாக்கல் காலை 11.03.அன்றைய கிரகபடி அம்சாலக்னம் கன்னி. 3மிடம்
வெற்றிதரும் இடம். 3மிடதது அதிபதி செவ்.10ல் பகை. மேலும் 9,10,11 ஆகிய
இடங்களையும் பார்க்கவேண்டும். 9மிட்த்து அதிபதி சுக்ரன் செவ்வாய் சாரம்
பெற்றதால் 9-10மிடத்தை 3ல் உள்ள கேது பலம் கொடுக்கிறார்.3ல்கேது
இருந்தால் வெற்றி பெறுவது சுலபம் அல்ல. ஆனால் 1,10க்குடைய புதன்சாரத்தில்
இருந்து குரு பார்ப்பதால் வெற்றி உறுதி ஆகிறது.எப்படி?.சொற்பவாக்கு
வித்தியாசத்தில் அமைகிறது. 1,4,7,10.ல்கிரஹம் இருப்பதால்
சதுர்கேந்திரயோகம் பலன் கொடுக்கும். எனவே கேதுவுக்கு பரிகாரம் செய்தால்
வெற்றி உறுதி.
கேதுவுக்கு என்ன பரிகாரம்?
கேது, புதன்வீட்டில். புதன் மஹாவிஷ்ணு அம்சம். கேது கொடிமரத்திற்கு
காரகர். எனவே கொற்றவன் கொடிபறக்க மஹாவிஷ்ணு ஆலயத்தில் கொடிமரம்
வைக்கவேண்டும்(கொடிமரம் இல்லாத கோவிலில்). ஜெ.ஜெ.அவர்களின் பிறந்த
ஜாதகப்படியும் இது அமைந்துள்ளது.இதன் விபரம் மேலும் எமது
வலைதளம்(http://sribagavathijodhidam.blogspot.com)சென்று அறிந்து
கொள்ளலாம்.
மேலும் ஓட்டு போடும் நேரமும் மிகமுக்கியம்.(உ-ம்)சேலம் தொகுதி எம்.பி
ஒருவர் நான் குறித்து கொடுத்த நேரப்படி 9.28-9.29க்குள் வாக்குபதிவு
செய்து பதவி பெற்றார்.(ஆதாரம்.ஜு.வி.யில் வெளியான பட்டன் டைம் ஜோதிடர்
கட்டுரை).எனவே இதேபோல்ஜெ.ஜெ.அவர்களுக்கும் ஓட்டு போடும் நேரம் கணித்து
அதை கடந்த 10.03.2011 அன்று அஇஅதிமுகழக தலைமை அலுவகத்தில்
கொடுத்துள்ளேன். அதன்படி ஜெ.ஜெ.அவர்கள் வாக்குபதிவு செய்தால் அஇஅதிமுக
கூட்டணி 189 இடங்களும்,அஇஅதிமுக 122 இடங்களும் கிடக்கும் என்பது
கணிதம்.இதில் மாற்றம் செய்தார்கள் எனில் வெற்றி என்பது இழுபறி என்பதையும்
தெரிவித்துக்கொள்கிறேன்.