Thursday, December 30, 2010

ஜெ.ஜெயலலிதாவின் உண்மையான ஜாதகம். மீண்டும் ஆட்சியை பிடிப்பார்.


ஸ்ரீ பகவதி அம்மா அவர்களுக்கு


எனது அருமை இனிய ஜோதிட மாணவர்களுக்கு PHR ன் ஜி.வி சிஸ்டம்(கோ.விஸ்வநாத சர்மா) மூலம் இனியபுத்தாண்டு வாழ்த்துக்களையும்ஆசிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.இன்றைய தமிழ்நாட்டில்மற்றும் டெல்லிவரையிலும்ஆட்சிசெய்கின்றஅரசியல்அமைப்புகளைஎல்லாம்வல்லஸ்ரீபகவதிஆசிர்வதிக்கட்டும்.
தமிழ்நாட்டின் வருங்கால முதல்வர் யார் என அறியநமது அ.இ.அ.தி.மு.க.பொதுசெயலாளர் ஜெ.ஜெயலலிதா அம்மா அவர்களின் ஜாதகம் கொண்டு ஆராய்ச்சி செய்து இந்த கட்டுரையை சமர்ப்பித்துள்ளேன்.எனது குருநாதர் திரு.PHRஅவர்கள் என்னிடம் வழங்கிய ஜாதகத்தைக்கொண்டு ஆய்வு செய்து கிடைத்த பலன்களை சமர்ப்பிக்கிறேன்.

பிறந்த நாள்: 1946.05.09ம் நாள் விய வருடம் சித்திரை மாதம் 
27ம் தேதி பிற்பகல் 12.56க்கு பெங்களூருவில் ஜனனம்.


சூ புத
சுக் ராகு
சனி மா

கே
புத
ல மா
சந் சுக் சனி

ராசி
செவ்

நவாம்சம்


ல சந்

குரு (வ)

கே

குரு (வ)

சூ செவ்

ராகு

கேது தசை இருப்பு..2வ..7மா..8நாள்.
PHR  ஜீ.வி.சிஸ்ட்த்தில் சந்திரனால் கணிக்கப்படும் உடல் திசை நம்மை
போன்றவர்களுக்கு தான் பயன்படுத்தி பலன் சொல்லவேண்டும். ஆனால் அரசியல்வாதிகளுக்கு இதை வைத்து பலன் சொல்லக்கூடாது. பண்டையகாலத்தில் அரசர்கள்தன் எதிரிகளை வெற்றி கொள்ள பின்வரும் முறையை தான் மிகவும் ரகசியமாக கையாண்டார்கள்.இம்முறையில்தான் தற்சமயம் அம்மா அவர்கள் தமிழக முதல்வர் ஆவதற்குண்டான சாத்தியகூறுகளை கண்டறிந்துள்ளேன்.

எப்படி?

அரசியல் சம்பந்தப்பட்டவர்களுக்கு உயிர்திசை  சூரியனைக்கொண்டு கணிக்கப்படவேண்டும்.இவர் ஜாதகத்தில் சூரியன்,பரணி 4ல் உள்ளார்.இது சுக்கிரதிசையாக கொள்ளவேண்டும். சுக்.இருப்பு 2வ.4மா.26நா. தற்போது சனிதசையில் புதன்புத்தி 2011.06.24வரை உள்ளது. ஜாதகத்தில் சனி,புதன் ஆகிய இருகிரகமும் வர்க உத்தமத்தில் உள்ளனர். புதனும்,கேதுவும் சூட்சம நட்சத்திர பரிவர்த்தனை.  ராசியில் 3,10க்கு உடைய சுக்கிரன், 5,8க்குடைய குருசாரம்பெற்று சனியோடு 11ல் உள்ளார்.(அம்சத்தில்) அதாவது 5க்கு நிவர்த்திஸ்தானத்திலும்,8க்கு4ம் இடத்திலும் இருப்பது மிகவும் சிறப்பு. 6,7க்குடைய சனி 11ல் இருப்பதால்(7மிடம் கூட்டு) தன் எண்ணம் போல் செயல்படுத்துவார்.ஜி.வி. சிஸ்ட்த்தில் திசாநாதன் இருக்குமிடம் லக்கினம்.இங்கு லக்னாதிபதி 4ம்வீட்டு அதிபதிகுடைய புதன்11ல்,மேலும் அந்த புதன் கேதுசாரம். கேதுவானவர் புதன்சாரம் பெற்று10ல் உள்ளார்.11ல் உள்ள புதன் குருவின் பார்வையில் இருக்கிறார். 9,10,11ம்இடங்கள் அரசியலுக்கு மிகவும் முக்கியம். லக்னாதிபதி 10,11குறிப்பதாலும்,அஸ்வணி நட்சத்திரத்திலும் உள்ளார்.

அஸ்வினி காரகத்துவம்.
1.உயர்வான இடம்
2.மலை உச்சி
3.தலைநகர்
4.கிரீடம். இதைப்போன்று பலகாரகத்துவம் உண்டு.

 சனி புனர்பூசத்தில் உள்ளது. ராமர் பிறந்த இந்த நட்சத்திரமானது பட்டாபிஷேகம்,ஆட்சி,சிம்மாசனம்,இளவரசன்,இளவரசி,சக்தி வாய்ந்த பலம்,மந்திரசக்தி,இரட்டைஆட்சி,அழியாதன்மை இவற்றை புனர்பூசம் குறிக்கும்.

தற்சமயம் சனிதசை பூசம் நட்சத்திரத்திலிருந்து நடைபெறுகிறது. பூசம் குருபகவான் பிறந்த நட்சத்திரம். லக்னாதிபதிபுதனை குரு பார்ப்பதால் தன்னுடைய எண்ணம் போல் நடக்கும்.அதனால் இம்முறை கண்டிப்பாக அம்மா ஆட்சியை பிடிப்பார்.

சென்றமுறை உயிர்திசை பூசம்1ல் இருந்து திசை நடந்த்து. அப்போது 10ல் ராகு,சுக்கிரனுடன் இருந்தார். ராகுவின் சாரம் மிருகசீரிடம். இதன் அதிதேவதை சந்திரன். குருபார்வை,எனவே சந்திரன்சாபம் பெற்றுவிட்டார்.அதனால்ராஜ்ஜியம் கிடைக்கவில்லை. ஆனால் இப்போது பூசம்4ல் இருந்து உயிர்திசை நடைபெறுகிறது. விருச்சிகத்திற்கு10ல் சந்திரன்கேது சாரம்.அதாவது மகம். மகத்தின் அதிதேவதை சுக்கிரன். சுக்கிரன்,சனியுடன் அம்சத்தில் உள்ளார்.புதன் கேதுசாரத்தில் உள்ளதால் ராஜாங்கம் என்ற கிரீடம் ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு அமையும்படி உள்ளதால் கீழ்காணும் பரிகாரத்தை அவசியம் செய்யவேண்டும்.

புதன் மேஷத்தில் கேது சாரம்.
1. மேஷம்மலையும்-மலையைச்சார்ந்த இடம்.
2. புதன் மகாவிஷ்ணுவின் அம்சம்.
3. கேது கொடிமரத்தைக்குறிக்கும்.

சூரியன் சுக்கிரன்சாரத்தில்
1. சுக்கிரன் செந்தாமரையை குறிக்கும்.
2. செந்தாமரை அதில் வாசம் செய்யும் லட்சுமியை குறிக்கும்.
3. மேஷம்  செவ்வாய் வீடு
4. செவ்வாய் பூமி காரகர்.

        செவ்வாய் கடகத்தில் உள்ளார் சூட்சமம் சுக்கிரன் ஆகிறார். எனவே மலைச்சார்ந்த பகுதியில் ஸ்ரீதேவி,பூதேவி சமேதரராய் உள்ள விஷ்ணு ஆலயதிற்கு கொடிமரம் வைத்தால் தங்கள்புகழ் ஜெகம் முழுதும் பரவ கொற்றவன் கொடியேற்றுவார் என்பதில் ஐயமில்லை.

அம்பிகையை ஆயிரம் நாமங்களில் வழிபடுவதே லலிதாசகஸ்ரநாம்ம். லலிதா என்றால் லட்சுமி,சரஸ்வதி,துர்க்கா ஆகும்.. இவற்றையே நான் ஜோதிட ரீதியில் நான் எழுத்தில் ஆய்வு செய்துள்ளேன்.


பெயர்.     நட்சத்திரம்.   அதிதேவதை
ஜெ   -      திருவோணம்  -     மகாவிஷ்ணு
     -     கேட்டை       -      இந்திரன்
     -     அஸ்விணி     -      சரஸ்வதி
லி     -     பரணி         -       துர்க்கை
தா         சுவாதி         -      லட்சுமி


அசுரர்களை வதம் செய்ய அம்பிகை வந்தாள் என்பது புராணம். இங்கு மேலே குறிப்பிட்டுள்ளபடி பார்க்கும்போது மக்களை காக்க தேவியின் அம்சமும்,பூர்வஜென்ம பலன் உள்ளவர்களுக்குத்தான் இந்த அமைப்பு கிடைக்கும்.பொதுவாக நம் நாட்டில் பெண்களை தெய்வாம்சமாக பார்ப்பதுண்டு. கேரளாவில் உள்ள சக்குளத்து பகவதி கோவிலில் பெண்களுக்கு சன்னிதானத்தில் நம்பூதிரிகளால் பாதபூஜை செய்வது வழக்கம்.அதனால் தான் கட்டுரையின் ஆரம்பத்தில் ஸ்ரீபகவதி அம்மா என்று குறிப்பிட்டுள்ளேன். எனவே ஜாதகத்தில் பூர்வஜென்மத்தில் செய்த நன்மை,தற்சமயம் பலனை கொடுக்க்கூடிய வகையில் திசைகள் நடக்க உள்ளது என்பதையும்,சரஸ்வதி,துர்க்கை,லட்சுமி மூவரின் கூட்டும் ஸ்ரீபகவதி என்று அழைக்கபடுவதாலும்,  ”  என்ற எழுத்து கேட்டை நட்சத்திரத்தை குறிப்பதால் அது கோட்டையை நிச்சயம் பிடிக்கும்.இதன் அதிதேவதை இந்திரன். இந்திரன் கையில் உள்ளது வஜ்ஜிராயுதம். அது எதிரிகளை வெல்லக்கூடியது. எனவே இம்முறை ஆட்சியில் அமர்ந்து தமிழகத்தை வஜ்ஜிராயுதம் போன்ற கோட்டையாக மாற்றி நாட்டை நல்வழிப்படுத்துவார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
                      
ஜோதிடர். கோ.விஸ்வநாத் சர்மா. 
30.12.2010... சேலம்.636008

Monday, December 27, 2010

ஜாதகம் இல்லாமல் துல்லியமான பலன் சொல்லமுடியுமா?

 வணக்கம் அன்பர்களே!
                       ஜோதிடர்களிடம் பலன் கேட்க பொதுவாக நமது 
பிறந்த ஜாதகம் தேவைபடும்.ஆனால் பிரசன்னம் பார்க்க ஜாதகம் தேவை
இல்லை. அதிலும் பிரசன்னத்தில் மிக துல்லியமான பலன்களையும்,ஏன்,
எதற்கு,எப்போது,எவ்வளவு,என எந்தவிதமான கேள்விகளுக்கும் மிக சிறப்பாக பலன்களை சிறப்பாக G.V.சிஸ்டம் மூலமாக சொல்லலாம்.

உதாரணம்.
கேள்வி: வாகனம் வாங்குவது விஷயமாக.
ஜோதிட உலகில் எத்தனையோ வழிமுறைகளில் ஜோதிடர்கள் பலன் சொல்கிறார்கள். அந்த வகையில் GV இன் பிரசன்ன முறையும் ஒன்று. உதாரணம்: 14/09/2007 காலை 09:07 மணிக்கு என்னிடம் ஒருவர் வந்தார். வந்தவருடைய நோக்கம் எது என்பதை GV சிஸ்டத்தில் மட்டுமே சொல்லமுடியும். GV சிஸ்டத்தில் முக்கியமாக பங்களிப்பது நவாம்சம் மட்டுமே.மேலும் இதனில் சுட்சமும் பயன்படுத்தி சொல்ல வேண்டும்.


செவ்

புதன் சனி
ராகு
ராசி
சுக்

நவாம்சம்
கேது

சூ சனி கேது
ல சுக் ராக
சந்

குரு
சந் பூதன்
சூ குரு


செவ்

1. வந்தவர் எதற்காக வந்தார்?
GV சிஸ்டம் படி மேற்படி ஆரூட சக்கரத்தில்
லக்னம்: துலாம் / மகரம்.
ராசி: கன்னி/ சிம்மம்/ சித்திரை.

வந்த நேரத்தில் லக்னம் சுவாதி 2 ல். சூட்சமம் சுக்ரன் ஆகிறார். சுக்ரன் அம்சத்தில் 01/05/10, குறிக்கிறார். மேலும் அவர் புதன் சாரம் பெற்று 06, 09 குறிக்கிறார். 06, கடன் 09 பாக்கியம் 10 தொழில் இவைகளை குறிக்கும். கடன் வாங்கி தொழில் செய்வதை பற்றி கேட்குறீர்களா? என்றேன்.
அவர் ஆமாம் என்றார்.

2. எந்த விதமான தொழில் செய்வது என்று கேட்டார்?
சுக்ரனின் சூட்சமம் GV சிஸ்டத்தில் செவ்வாய் ஆகும். செவ்வாய் 04, 11 ன் அதிபதி. எனவே வாகனம், உணவு தயாரிப்பு, ஆடை சம்மந்தப்பட்ட தொழில்(Tailor).  11 ம் இடம் அவரின் விருப்பத்தை குறிக்கும். ராசியில் செவ்வாய் ரிஷபத்தில் உள்ளார். கால் நடை சம்மந்தப்பட்டது என்றும் கூறினேன்.    அதற்க்கு அவர் வாகனம் சம்பந்த பட்டது என ஒப்புகொண்டார்.

3. புதிய அல்லது பழைய வாகனம் இவற்றில் எது வாங்கலாம்?
செவ்வாய் அம்சத்தில் புதன் வீட்டில், மிருகசிரீடம் 2 ல் உள்ளார். கண்ட நட்சத்திரம் எனவே பழைய வாகனம் மட்டுமே வாங்க முடியும் என்றேன். அவரும் அதையே வாங்குவதாக எண்ணினார்.

4. வாகனம் எங்கு கிடைக்கும்.
செவ்வாய் கன்னியில் உள்ளதால் தென் மேற்கில் கிடைக்கும் என்றேன். தரகர்கள் அந்த திக்கில் உள்ளதாக சொன்னார்கள். மேற்கண்ட அணைத்து கேள்விகளுக்கும் சரியான பதில் சொன்னீர்கள் என்றும் கூறினார்.

5.என்ன விலையில் வாங்கலாம்.
செவ்வாய் ராகு சூட்சமத்தில் உள்ளார். எனவே இங்கு யுக்தியும் புத்தியும் கொண்டு பலன் சொல்லவேண்டும். செவ்வாய் மிருகசிரீடத்தில் உள்ளதால் பாதி விலையாக கொள்ள வேண்டும். பிரசன்ன ஆருடத்தில் சந்திரன் முக்கிய பங்கு வைப்பார். சந்திரன் இன்றைய தினம் ஒரு பாதம் கடக்க 06:43 நிமிடம் எடுத்து கொள்வார். காலை 10:15 முதல் மாலை 04:58 வரை 2 ம் பாதத்தில் உள்ளார். சித்திரை பகை நட்சத்திரம். சித்திரையின் அளவில் ¼ பங்கு 1750.

செவ்வாய் ராகு சூட்சமத்தில் உள்ளதால் 125000.00 +1750.00= 126750.00. வாங்கலாம் என்று சொன்னேன். மேலும் வண்டியை 04:58 குள் பார்க்கலாம் என்று சொன்னேன். அதற்க்கு அவர் சரி என்று சொல்லிவிட்டு சென்றார்.
சென்றவர் எம்மிடம் Rs. 130000.00 விலை சொல்லுவதாகவும் வண்டியை மாலை 04:50 மணிக்கு தான் பார்த்ததாகவும் கூறினார். நானும் கமிஷன் உள்பட அதே தொகைக்கு வாங்க சொன்னேன்.
இவ்வளவு எளிமையாக P.H.R இன் GV system ல் பிரசன்னத்தை சொல்லமுடியும்.  
                  
               வாழ்க குருநாதர் P.H.R இன் புகழ்!!!