Sunday, August 29, 2010

ஸ்ரீ காளஹஸ்தி கோபுரம்.

ஸ்ரீ காளஹஸ்தி கோபுரம்.
வணக்கம்!!
அன்புடைய ஜோதிட நண்பர்கள், அபிமானிகள், ஜோதிட மாணவர்கள், அனைவரும் ஜோதிட ரீதியாக அறிந்துகொள்ள ஸ்ரீ காளஹஸ்தி கோபுரம் அடியோடு சரிந்து விழுந்ததால் நாட்டில் ஏற்பட போகும் சங்கடங்கள் இவைகளை P.H.R-இன்  GV system மூலம் மிக எளிதாக சாதாரண மாணவர்கள் கூட புரியும்படி சொல்லிருக்கிறேன்.
திரு காளஹஸ்தி கோபுரம் 26.05.10 இரவு 08:05 மணிக்கு சரிந்து விழுந்தது என்று செய்தி வெளியிடப்பட்டது (செய்திதாள்: காலைக்கதிர்).
வைகாசி 12 – விசாகம்.
குரு
பு
சூ
சுக் கே


சூ செ கே
ல சந்


ராசி

சனி சுக்
அம்சம்


செ

குரு பு
ல ரா

சந்
சனி


ரா


கோபுரம் விழுந்த இடம் ஆந்திரா மாநிலம். காளஹஸ்தியில்
ஸ்தலம்: ராகு / கேது கிரகத்திற்கு உட்பட்டது.
உலக லக்னம்: மேஷம்.
எந்த ஒரு நாடாக இருந்தாலும் அதன் தலை நகரம் மேஷமாகும். அதே போல் ஒவ்வொரு மாநிலத்தின் தலை நகரம் மேஷம். (இது P.H.R-இன்  GV system முறை). மேலும் இம்முறை மேஷத்திலிருந்து ஆரம்பிக்கும். அம்சமே பிரதானம் என்பதால் மேஷத்தில் சூரியன், செவ்வாய், கேது அமர்ந்து உள்ளார். ஐந்தாம் இடம் சிம்மம், அதிபதி சூரியன்.
சூரியன் ரோகினி சாரம் பெற்று செவ்வாய், கேதுவுடன் அமர்ந்துள்ளார். செவ்வாய், கேது நாட்டின் சட்ட சிக்கலை குறிக்கும். ரோகினி என்பது பெண்ணை குறிக்கும். நாட்டின் முக்கிய தலைவர்களைகையும், பெண் தலைவர்களையும் உடல் ரீதியாகவும் மன ரீதியகவும், அரசியல் ரீதியாகவும் பாதிப்பு ஏற்படும். கேது புனர்பூச நட்சத்திரத்திலும், செவ்வாய் கேதுவின் சாரத்தில்(மகம்) உள்ளார். மகம் விவசாயம், அரசியல், வன்முறைக்கு பயன்படுத்தும் ஆயுதங்கள் இவைகளை குறிக்கும். புனர்பூசம் நட்சத்திரம் ராமர், அயோத்தி, பிரிக்கும் தன்மை இரட்டை நகரம், இரட்டை குழந்தை, கோவில், பதவியை இழத்தல், இவைகளை குறிக்கும். இதே போல் இன்னும் பல காரகத்துவம் உண்டு. இக்கட்டுரைக்கு தேவையானதை மட்டும் நான் எடுத்துள்ளேன். குருவின் காரகம் தங்கம். அதாவது வளையல், செயின், தோடு, இதுபோன்ற உருவம் செய்யப்பட்ட ஆபரண தங்கத்தை குறிக்கும். சொக்க தங்கத்தை சனி குறிக்கும். சூரியன் மேஷத்தில் ரோகினியில் உள்ளார். சந்திரனின் மனைவி ரோகினி. மிகவும் அழகான பெண். தட்சனின் இருவத்தி ஏழு பெண்களை திருமணம் செய்து கொண்டது புராணத்தில் உள்ளது.
சூரியன் ரோகினி சாரத்தில் உள்ளதால் மிக பிரகாசமாக இருக்கும். குருவுக்கு தங்கம். ஹிந்தியில் சோனா. பிரகாசம் என்பதன் மற்றொரு பெயர் தேஜஸ் அல்லது காந்தி. இவை இரண்டையும் இணைத்தால் காங்கிரசின் தலைமையை குறிக்கிறது. செவ்வாய் சிகப்பு நிறத்தையும், சூரியன் சந்திரனின் சாரம் பெற்றதால் வெண்மையும், கேது புதன் வீட்டில் அமர்ந்ததால் பச்சை நிறத்தை குறிக்கும். அக்கட்சியின் கொடியை உணர்த்துகிறது. எனவே அம்மையார் அவர்களுக்கு அக்கட்சியில் உள்ளவர்களால் அம்மாநிலத்தில் அவப்பெயர் உண்டாகும். மேலும் சூரியன் பிதா காரகர் ஆவார். பிதாவை ஐயா என்றும் சொல் வழக்கில் உள்ளது. உதய சூரியனின் நிறம் ரோஸ். எனவே அம்மாநிலத்தின் முதல்வர் பெயரில் ரோசையா (ரோஸ் + அய்யா) உள்ளார். அவருக்கும் தன் சகாக்களால் தர்மசங்கடம் உண்டு.
P.H.R-இன் GV system மேஷம், ரிஷபம், மிதுனம் – கிழக்கு.
கடகம், சிம்மம், கன்னி – தெற்கு.
சிம்மத்தில் குரு இருப்பதால் அக்கோவிலின் தெற்கு புரத்தில் தங்கத்தை பெயர் கொண்ட ஆறு உண்டு (ஸ்வர்ணமுகி). ராசி மற்றும் அம்சம் சக்கரத்தில் மேஷதிர்க்கு ஏழாம் இடம் நிவர்த்தி ஸ்தானம். அதில் ராகு அமர்ந்து உள்ளார். ராகு கண்ட நட்சத்திரமான பூரடத்தில் உள்ளார். தோஷ நிவர்திக்கான பூஜைகள், ஹோமங்கள், இவைகள் செய்ததால் கோபுரம் பாத்திப்பு ஏற்பட்டது. கோவில்லுக்கு என்று தோஷ நிவர்த்தி செய்துகொள்ளாததும் காரணமாகும்.
சென்னை மாகாணம் பிரிப்பதற்கு முன்பு தமிழ் நாட்டில்தான் ஸ்ரீ காளஹஸ்தி கோவில் இருந்தது. எனவே தமிழ் நாட்டின் அரசியலிலும் திடீர் மாற்றம் வரும் வாய்ப்பை கிரகங்கள் கூறுகிறது. ஹஸ்த நட்சத்திரம் என்பது கையை குறிக்கும். அதன் அதி தேவதை சூரியன். எனவே காங்கிரசிற்கும், தமிழக அரசியலுக்கும் தொடர்பு உண்டு. பூர்விகத்தை ஆந்திராவாக கொண்ட அரசியல் தலைவர்கள், நிலசுவாந்தார்கள், பிரபுக்கள், இவர்கல்லுகும் சங்கடம் ஏற்படும் என தெரிகிறது. காரணம் மறுநாள் இரவு கேது திருவாதிரை 4 ல் மாறப்போகிறார். திருவாதிரை ருத்திரன் பிறந்த நட்சத்திரம்.
மிதுனம் தென் கிழக்கை குறிக்கும். அம்சத்தில் கேது குரு வீட்டில் அமர்வதால் குரு வேதத்திற்கு அதிபதி ஆவார். அம்சத்தில் குரு சிம்மத்தில் உள்ளார். சிம்மம் மலையும் மலையை சார்ந்த இடம். அதற்க்கு வனம், ஆரண்யம் என்றும் பெயர் உண்டு. வேதம் + ஆரண்யம் = வேதாரண்யம் என்று பெயர் உண்டு. அங்குள்ள சிவன் பெயர் வேதபுரீஸ்வரர் என்ற பெயர் உண்டு. மீனம் கடல் பகுதி ஆகும். சிம்மத்தில் குருவுடன் புதன் உள்ளார். புதன் பரணி நட்சத்திரத்தில் உள்ளார். சுக்கிரன் சாரம். சுக்ரன் + புதன் இணையும் பொழுது ரங்கநாதரை குறிக்கும். ரங்கநாதர் பள்ளி கொண்ட இடம் ஸ்ரீரங்கம். இந்த புதனை கும்பதிலிருந்து சுக்ரன் + சனி பார்வை பெறுகிறார்.
கும்பம் என்பது கலசம், கோபுரம் என்றும் சொல்லபடுவதுண்டு. மேஷத்திர்க்கு பாதக ஸ்தானத்திலிருந்து பார்ப்பதால் அக்கோவிலில் திடீர் பாதிப்பு ஏற்படும்.
ஆடி 13, 14 இரவு செவ்வாய் உத்திரம் நாலில் சனியுடன் கூடும்போது திடீர் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதையும் கிரகங்கள் குறிக்கிறது. இதை இன்னும் விரிவாக எழுதவே மனம் நினைத்தாலும் ஏதோ ஒரு காரணத்தினால் இதனை நிறைவு செய்கிறேன்.
எல்லாம் வல்ல ஸ்ரீ பகவதி நாட்டையும், நாட்டு மக்களையும், அரசியல் தலைவர்களையும் காக்கட்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்.
சுபம்!!!
கட்டுரை எழுதிய நாள்: 27/05/2010.

Friday, August 20, 2010

ஒரு வினாடியில் ஜோதிட பலன் சொல்வது எப்படி ?

ஜோதிட அபிமானிகளுக்கு வணக்கம் மேலே உள்ள தலைப்பு வியப்பாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும் முடியுமா? என்று சந்தேகமும் வரும் காரணம் பல ஜோதிடர்கள் ராசி, அம்சம் பயன் படுத்தியும் சரியானபடி பதில் சொல்வதில்லை காரணம் என்ன. ஜோதிடத்தில் கிரக அடைவுகள் இருந்தால் மட்டும் போதாது ஜோதிடம் என்பது உலகில் பரவலாக உள்ளது என்று தெரிவதில்லை. உலகளாவிய விஷயங்கள் புராண இதிகாசங்கள் நட்சத்திர அதி தேவதைகள் மற்றும் நல்ல அனுபவங்கள் இவற்றைக்கொண்டு பலன்களை சொல்லவேண்டும். மேலும் பலன் சொல்லும் போது  பிரசன்னத்தையும் சேர்த்து சொல்லும் போது ஆச்சரியப்படும்படியும் இருக்கும் மேலும் சகுனம் -நிமித்தம் சேர்த்துக்கொண்டால் ஜோதிடரை கடவுளாகவே மதிப்பார்கள். வெளியில் செல்லும் போது சாப்பிடும்  போடு பேசும்போது
என இந்த மாதிரி சமயங்களில் நிகழும் விசயங்களையும் கணக்கில் கொள்ளவேண்டும் .
இதுபோல பல விசயங்களை நான்  PHR  ன் GV சிஸ்டம் மூலம் பலன் சொல்லி இருக்கிறேன் ஜோதிடம் பார்க்க வருபவர்கள் வரும் நேரம் ஓரை இவைகளை கணக்கிட்டு கொண்டால் வந்தது யார் எதற்காக வந்தார் அவர் நட்சத்திரம் திசை நடக்கிறது போன்ற வைகளை மிகவும் துல்லியமாக சொல்லலாம் .

உ-ம்கேள்வி :1


எனக்கு 4  குழந்தைகள்  நான் எந்த மகன் கூட இருப்பேன் என்பது அவரின்  கேள்வி


12 07 2010 காலை 9 .00 மணி அன்றைய கிரகநிலை  
கிரகம்               ராசி              அம்சம் 

லக்னம்            சிம்                  மிது
சூரியன்            மிது                ரிஷ   
சந்திரன்           கட                  கட
செவ்வாய்       சிம்                 விரு
புதன்                  கட                  துலா    
குரு                   மீனம்             கன்
சுக்ரன்              சிம்                  மிது
சனி                   கன்                 கும்
ராகு                  தனு                கன்
கேது                 மிது                மீன
மாந்தி              விரு               கன்

PHR ன் GV சிஸ்டத்தில் அம்ச லக்னம் பிரதானம் அதன்படி லக். மிதுனம் லக்னாதிபதி யும்  பஞ்சமாதிபதியும் பரிவர்த்தனை எனவே நீங்கள் முதல் மகனுடன் தான் இருக்கவேண்டும் என்றேன் ஒத்துக் கொண்டார் அவருடன் காலம் முழுதும் இருக்கலாம் எந்த சங்கடமும் இல்லை என்றேன் அவரும் எனது மருமகள்களில் மூத்த வர் நன்கு கவனித்து கொள்வதாகவும் அவர்களும் என்னை யாரிடத்திலும் போய் இருக்கவேண்டாம் என்று சொல்கிறார்கள் என்றும் சொன்னார்.

 2 வது  உ-ம் 

கேள்வி;ஆயுள் பயம் அடிக்கடி வருகிறது என் ஆயுள் எப்படி இருக்கும்?

13 .07 .2010 மதியம் 12 .05 மணி அன்றைய கிரகநிலை
கிரகம்                 ராசி                      அம்சம்  

லக்னம்             கன்                          சிம்    
சூரியன்             மிது                         மிது
சந்திரன்            கட                           தனு
செவ்வாய்        சிம்                          விரு
புதன்                  கட                            துலா
குரு                    மீன                           கன்
சுக்ரன்               சிம்                            மிது
சனி                    கன்                           கும்
ராகு                   தனு                           கன்
கேது                  மிது                            மீன 
மாந்தி                விரு                          கும்

அம்ச லக்னம் சித்திரை 1 இல் .இதன் சூட்சுமம் புதன்  புதன் சனி சாரம் சனி  சனி + மாந்தி யுடன்  சேர்ந்து லக்னத்தை பார்கிறார் எனவே அவர் கேட்ட கேள்வி ஆயுள் பயத்தை தான் கொடுக்கும்

ஆயுள் உண்டா இல்லையா?

ஆயுள் ஸ்தான அதிபதி ஆயுள் ஸ்தானதையும் ஆயுள் காரகர் சனி லக்னதையும் பார்ப்பதால் ஆயுள் உண்டு  மேலும் 6 ம் பாவம் பழமையும் உள்ளதாலும் சூரியன் சாரம் பெற்றதால் வாதம்,பித்தம்,கபம்,எனும் திரி தோஷம் உள்ளதால் இவர் ஜெயஹோமம், ஹௌடதம் இவைகளை கையாண்டால் மேற்படி பயம் விலகும் என கூறப்பட்டது
உ-ம்  கேள்வி :3

என் வீட்டில் மூக்குத்திக்கு வாங்கி வைத்த வைரம் காணவில்லை?
14 .07 .2010 பிற்பகல் 1 .30 மணி புதன் கிழமை கிரக நிலை
கிரகம்                 ராசி                   அம்சம்

லக்னம்              துல                      கும்
சூரியன்              மிது                     மிது
சந்ரன்                 சிம்                      மேஷ
செவ்வாய்         சிம்                      தனு
புதன்                   கட                        விரு
குரு                     மீன                       கன்
சுக்ரன்                சிம்                         கட
சனி                     கன்                        கும்
ராகு                    தனு                        கன்
கேது                  மிது                         தனு
மாந்தி               கன்                          கட

PHR  ன் GV சிஸ்டத்தில் அம்சம் பிரதானம். முதலில் கேள்வி உண்மையா?. அன்றைய லக்னம்  துலாம்/கும்பம். அதாவது சுவாதி 3 ல் லக்னம் கும்பத்திக்கு  3 ல் சந், மேலும் 6 ல் சுக், மாந்தி. சுக், வைரத்திக்கு உண்டானவர். கேள்வி உண்மை . லக்,சூட்சுமம் சனி,அதிசூட்சுமம் சூரி. பொருளாக கொண்டு சூட்சுமம் பார்த்தால் ராகு ஆகும். ராகு பூராடம் 2 ல்மேலும் உத்திரட்டாதி 2 ல் குரு உடன். பூராடம் -பட்டு, நகைகள்,வைரம்,லட்டு, மெட்டி, கொலுசு,சாளகிராம் இவைகளைகுறிக்கும்.எந்த ஒரு கேள்விக்கும் GV சிஸ்டத்தில் 10 ம் பாவம் காரியஸ்தானம் முக்கியம். இதோ சுவாதி 3 ல் ,10 ம் பாவத்திக்கு 5 வது நவாம்சமாக வரும்.   ராசியில் துலாதிக்கு 10 பாவத்திக்கு 5 வது நவாம்சம் விருசிகம். விருசிகத்தில்  புதன் அமர்ந்துள்ளார்.இங்கு கண்டிப்பாக ஒரு கிரகம் இருக்க வேண்டும் வீடு,மனை,வாகனம்,பொருள் எதுவாக இருந்தாலும்4 ம் பாவம் முக்கியம். 4 பாவம் மகாரம் இதன் 5 வது நவாம்சம் ரிசபம் எனவே விருச்சிகத்தில் உள்ள புதன் ரிசபத்தை பார்கிறார். மகம் 1 ல் சந்திரன் அன்று மதியம் 2 .16 வரை  இருக்கும். 2 ம் பாதம் இரவு 7 .40 வரை. எனவே வினா விடுத்தவர் பிற்பகல் 1 .30 மணி எனவே இன்னும் 46 நிமிடத்தில் ரிஷபத்தில் சந்திரன் 2 ம் பாதம் வந்து விடும் என்று கணக்கிட புதன் பார்வை படுவதாலும் ஸ்திர லக்லனத்தில் இருப்பதினாலும் அது வீட்டில் தான் இருக்கிறது என்பதை உறுதியாக கூற முடிந்தது.

அது எங்கு  உள்ளது?. பொருளின் சூட்சுமம் ராகு வந்ததால் அவர் குருவோடு கன்னி யில் உள்ளார். ராகு தெ.மேற்கு உண்டான கிரகம். எனவே வீட்டில் தெ.மேற்கில் உள்ளது என கூறப்பட்டது. கன்னி ராசி என்பது அலமாரி,புத்தகம் வைக்கும் இடம், பீரோ லாக்கர் இவைகளை குறிக்கும் என்றேன்.
அவர்கள் அங்கு எல்லாம் தேடி பார்த்து விட்டு தான் இங்கு பிரசன்னம் பார்க்க வந்தோம் என்றனர். அவசரப்பட வேண்டாம் இன்னும் சொல்ல வேண்டிய விஷயங்கள் உள்ளது என்றேன். பிற்பகல் 2 .16  க்கு  சந்திரன் ரிஷபத்தில் வரும். அப்போது மகம் 2 ல் சந்திரன். பொதுவாக சந்திரனின்  தானியம் நெல் . மகம் எனும் போது பாசுமதி, பச்சரிசி, எலி, குழி, பொந்து இவைகளை குறிக்கும். எலி, பொந்தில் வசிப்பதால் உங்கள் பீரோ லாக்கரில் கண்டிப்பாக இருக்கும். மேலும் உத்திரட்டாதி 2 ல் குரு,ராகு இருப்பதால், குரு- மஞ்சள் கலர், பச்சரிசி -சந்திரன்காரகர் ஏனெனில் சந்திரனை குரு 9 ம்பர்ர்வையாக பார்க்கிறார், குரு+சந்திரன்=மஞ்சள் அரிசி அதாவது அட்சதை என்றேன். அவர்கள் முகம் பிரகாசமானது. மேலும் புதன் வீட்டில் ராகு புதனாக மாறுவார் .குரு+புதன்=விஷ்ணு அம்சம். உத்திரட்டாதி என்பதால் அவதார புருஷன் படத்தில் அட்சதையுடன் இருக்கும் என்று மூளை வேலை செய்தது. அவர்களிடத்தில் மேற்படி விஷயத்தை சொன்னதும்,  அவர்கள் என்னிடத்தில் நாங்கள் ராகவேந்திரர் கோவிலுக்கு சென்று வந்தோம் அங்கு மந்திரட்சதை கொடுத்தார்கள் அதை பிரசாதம் என்பதால் எப்பொழுதும் பீரோ லாக்கரில் வைப்போம் என்றார்கள்.  எது எப்படி இருப்பினும் காரியஸ்தானதிபதிக்கு 5 வது நவாமசதிபதி பார்வை சந்திரனுக்கு  கிடைக்கும் போதுதேடிக்கொண்டு இருந்த வைரம் கிடைக்கும்.  விரு.அதிபதி செவ்வாய். இரவு 7 .40 க்கு சந்திரன் மிதுனம் பிரவேசிக்கும்போது செவ்வாய் பார்வையால் கிடைக்கும் என்றேன். இரவு 7 .50 மணிக்கு வைரம் கிடைத்ததாக எனக்கு 8 .11 மணிக்கு தொலைபேசியில் தகவல் சொன்னார்கள்

   


Saturday, August 14, 2010

ஜோதிடத்தில் ஸ்ரீராமஜெயம்

அன்புள்ள ஜோதிடர், மற்றும் ஜோதிட அபிமானிகள், ஜோதிட மாணவர்கள் இவர்கள் அனைவர்க்கும் மேலே கொடுக்கப்பட்டு தலைப்பு வித்தியாசமாகவும், ஆச்சிர்யமகவும் இருக்கும். ஜோதிடம் என்பது ஜோதிடத்தில் இல்லை என்பதை கூறியுள்ளேன். நாம் பார்ப்பது, பேசுவது, எழுதுவது, நிற்பது, உண்பது மற்றும் பலதரப்பட்ட விஷயங்களில் ஜோதிடம் உள்ளது.
மேலும் நம் இதிஹாசம், புராணம், நீதி கதைகள் இவைகள் அனைத்திலும் நம் வாழ்க்கைக்கு தேவையான அத்தனை விவரமும் இருக்கிறது. இதில் நான் ஜோதிடத்தில் இவைகளை பயன்படுத்தி பிரசன்னம் சொல்லுகிறேன். எப்படி எனில் உதாரனமாக ஸ்ரீ ராமஜெயம் என்ற எழுத்தில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் ஒரு நட்சத்திரத்தையும் அதன் அதி தேவதை, மரம், மிருகம் இவைகளை குறிக்கும்.
ஸ்ரீ ராமஜெயத்தின் வலிமையை புராணிகர்கள் பயன்படுத்திய விதம் கதா காலட்சேபம் ஆன்மிக சொற்பொழிவு இவைகளில் கேட்டு இருப்பீர்கள். ஆனால் இதை என் குருநாதர் சொல்லி கேட்ட விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். பஞ்சாங்கத்தில் 27 நட்சத்திரத்தில் விளக்கம் இருக்கிறது.
ஸ்ரீ – உத்திரட்டாதி நட்சத்திரம் – பசு
ரா(ர) – சித்திரை நட்சத்திரம் – புலி
ம(ம்) – மகம நட்சத்திரம் – எலி.
ஜெ(ஜே) – திருவோணம் நட்சத்திரம் – குரங்கு.
ய – கேட்டை நட்சத்திரம் – மான்.
ம்(மா) – மகம் நட்சத்திரம் – எலி.

ஸ்ரீ என்ற எழுத்தின் தத்துவமே லக்ஷ்மியை குறிக்கும். லக்ஷ்மியின் கணவர் மஹா விஷ்ணு. அவதாரம் – பெருமாள். குடிகொண்ட இடம் திருப்பதி. எனவே ஸ்ரீ என்ற சொல் உத்திரட்டாதி நட்சத்திரம் என்பதால் திருப்பதியை குறிக்கும்.
ரா – சித்திரை நட்சதிரம், புலி வாகனம். துர்க்கைக்கு உடையது.
ம – மகம் எலியை குறிக்கும். எலி விநாயகரின் வாகனம்.
ஜெ – தைரியத்தையும், ஆத்ம பலனையும் குறிக்கும்.
சித்திரை நட்சத்திரம் திருமண பந்தத்தையும் குறிக்கும். அதாவது இணைப்பு நட்சத்திரத்தை குறிக்கும். இதனால் ரா என்ற எழுத்து இணைப்பை குறிக்கும். மேஷதிர்க்கு ஐந்தாவது ராசி சிம்மம். இதில் மா, ம் என்ற எழுத்துகள் உண்டு. ஐந்தாவது ராசியை குழந்தையை குறிக்கும். பத்தாவது ராசி மகரம். அதில் உத்தராடம், திருவோணம் நட்சத்திரம் உண்டு. உத்தராடம் ஜீ எழுத்தை குறிக்கும். ஜீவன் + வெற்றி. அதாவது ஜீவன் + வாழ்க்கை இதைதான் ராம் என்பார்கள். திருமணம், குழந்தை, வாழ்கை, ஜெயம் இவைகளை குறிப்பதால் ஸ்ரீ ராமஜெயம் என்று வந்தது.
மேலும் ம், மா இவை மக நட்சத்திரம் என்பதால் அதின் அதி தேவதை சுக்ரன். சுக்ரன் கர்பிணி கிரகம். அதாவது குழந்தை செல்வத்தை குறிக்கும். வெற்றி அடைவதற்கு(ஜெ). திருவோண நட்சத்திரம், குரங்கு ஆகும். குரங்கை கொடியில் கொண்டு பாரத போரில் கிருஷ்ணன் ஜெயித்தார். ராவணனை வெல்வதற்கு ஹனுமான் இருந்தார். ஆதலால் பயம் இல்லாமல் இருப்பதற்கும், வெற்றிக்கும் நம் முன்னோர்கள் ஹனுமான் வழிபாடு செய்தார்கள்.
ஜெ – எங்கு உள்ளதோ அங்கு வெற்றி, குழந்தை, ஐஸ்வர்யம், இவைகளை கொடுக்கும். இவை அனைத்தும் இருந்தாலும் அனுபவிக்க கூடிய உணர்வு இல்லை எனில் பலன் இல்லை. ய என்ற எழுத்து கேட்டை நட்சத்திரத்தை குறிக்கும். அதிபதி இந்திரன். அவன் இந்திரியங்களுக்கு அதிபதி. இதனால்தான் ஜெ-க்கு அடுத்தது ய வந்தது.
அதுவே ஸ்ரீ – செல்வம் --- ரா – திருமணம் --- ம – குழந்தை --- ஜெ – வெற்றி --- ய – உணர்வு --- ம் – பேர குழந்தையை குறிக்கும்.
இதுவே ஸ்ரீ ராம ஜெயம்.
எப்படி!!!!!!!!! ஜோதிடத்தில் ராம ஜெயத்தின் மகிமை.
வாழ்க குருநாதர் புகழ்!!! வளர்க ஜோதிடம்!!!
சுபம்!!!

குடியிருக்கும் வீட்டில் செய்வினை தோஷம் உள்ளதா?

வணக்கம் ஜோதிட வாசகர்களே இக் கட்டுரையில் குடியிருக்கும் வீட்டில் தோஷம் உள்ளதா என்பதை பிரசன்னம் மூலம் எவ்வாறு அறிந்து கொள்வது என பார்போம். நம் ஜோதிடர்கள் தமது ஞானத்தை விரிவு படுத்திக்கொள்ளாமல் ஜாதகத்தை மட்டும் வைத்துக்கொண்டு சனி,குரு பெயர்ச்சிகளையும்,திசை,புத்தி, அஷ்டமசனி இவைகளை வைத்துக்கொண்டு,மேலும் துருவ கணிதம் தனது அனுமானத்தையும் சேர்ந்து பலன் சொல்கிறார்கள்.சில தெய்வாதினமாக சில நடந்து விடுகிறது.

PHR  இன்    GV சிஸ்டம் என்பது ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோர் போல யாருக்கு எது வேண்டுமோ அதை பெற்றுக்கொள்ளலாம். எளிய முறை சிஸ்டத்தில் கண்டறியப்பட்டு மனதளவிலும் குடும்ப அளவிலும் பிரச்னை தீர்ந்து நிம்மதியாக உள்ள விஷயமே கீழே கொடுக்க பட்டுள்ளது. எம்மிடம் வந்த நபர் தான் யார், தன வேலை, பொருளாதார வசதி பற்றி கூறி விட்டு, தான் சிறிதும் நிம்மதி இல்லாமல் இருக்க என்ன காரணம் என கேட்டார்.அவர் பல ஜோதிடர்களிடம் சில பரிகாரம் கேட்டு செய்து உள்ளார். ஆனால் நிரந்தர தீர்வு இல்லை என சொன்னார்.எல்லாம் வல்ல பகவதி அருளாலும், குருநாதர்  இன் ஆசியாலும் அவர் வந்த நேரத்தை கொண்டு பலன் சொன்னேன்.


30 .12 .2009 .மாலை 6 மணி 30 நிமிடம், புதன் கிழமை. அன்றைய கிரகநிலை கீழே,
கிரகம்            ராசி               அம்சம் 

லக்னம்          மிதுனம்        மேஷம்   
சூரியன்          தனுசு             சிம்மம்   
சந்திரன்         ரிசபம்            கன்னி       
செவ் (வ )      கடகம்         கும்பம்     
புதன்              தனுசு            விருட்சிகம் 
குரு                கும்பம்          துலாம் 
சுக்ரன்           தனுசு             கடகம்       
சனி                 கன்னி           மேஷம்    
ரகு                 தனுசு               தனுசு        
கேது             மிதுனம்          மிதுனம்     


PHRன் GV சிஸ்டத்தில் புனர்பூசம் 1 இல் லக்னம் . லக்ன சூட்சமம் சுக்ரன் அதி சூட்சமம் செவ்வாய். இவர் கும்பத்தில் உள்ளார்.ராசியில் மாந்தி செவ்வாய் சாரம் பெற்று அம்சத்தில் 8 இல் மறைகிறார். இந்த கிரக அமைப்பு வீட்டில் செய்வினை உள்ளதை காட்டியது. அது எங்கு உள்ளது என கூற முடியுமா?.வீட்டில் மேற்கு,(அ) வ .மேற்கு பகுதியில் என்றேன். வந்தவருக்கு ஒரே அதிர்ச்சி கொஞ்சம் விவரமாக கூறுங்கள் என்றும், மேற்கு, வ .மேற்கு கடவுள் வழிபாடுஇடம் உள்ளது (ஏன் எனில் கும்பம் தெய்வீகம்  உள்ள உயர்வான இடம் )என்றேன். தெய்வம் உள்ள இடத்தில செய்வினை இருக்க முடியுமா என்றார்.முடியும் முன்பு இருந்த வழிபாடு தற்சமையம் இல்லை என்றும் அங்கு இப்பொழுது தெய்வீக சக்தி இல்லாததையும் சொன்னேன்.அவர் ஒத்துக்கொண்டார்.

கும்பத்தில் செவ்வாய் ,அவரின் சூட்சமம் சுக்ரன்.சுக்ரன் கண்ணாடிக்கு உண்டான கிரகம். எனவே சுக்ரனை பிளாஸ்டிக்காக கொண்டு அதில் சுற்றப்பட்ட ஒரு தகடு உள்ளது(செவ்வாய் செம்புக்கு அதிபதி) என்றேன்.அவை எந்த இடத்தில் உள்ளது என்றார். மீண்டும் செவ்வாயின் சூட்சுமமும்,சுரணை கொண்டும் ஆராய்ச்சி செய்ததில் சுக்ரன் சாரம் மூலம்.மூலம் ஆஞ்சநேயர் நட்சத்திரம் எனவே ஆஞ்சநேயர் போட்டோவில் இருக்கும் என்றேன்.செவ்வாயில்  லக்ன சூட்சுமம் உள்ளதால் உன் சகோதரன் மூலம் செய்வினை செய்யப்பட்டது என்ற உடன் கண்ணீர் விட்டுவிட்டார்.

அவர் கூறியதாவது அய்யா,நான் ஆஞ்சநேயர் பக்தன்.என் சகோதரன் எனக்கு பிரேம் போட்டு அப்படத்தை கொடுத்தார் நானும் அதை வழிபட்டு வந்தேன் இப்போது என்ன செய்ய வேண்டும் என்றார். வருத்த பட   வேண்டாம் ஸ்ரீ பகவதி அருளால் நல்லது நடக்கும் என கூறி அவருக்கு ஸ்ரீ பகவதி பிரசாதம் கொடுத்து வலது கையில் கட்டிக்கொண்டு படத்தில் உள்ள தகடை எடுத்து அதை ஒரு நீர் நிலையில் போட்டு விடவும் என்றேன். மறுநாள் காலையில் எடுத்தபோது வீட்டில் உள்ளவர்கள் அதிசயத்துடன் பார்த்தனர் என்றும் நீங்கள் சொல்லியபடி செய்து  விட்டேன் என்றும் எனக்கு போனில் தகவல் சொன்னார்.

வீட்டில் ஸ்ரீ கணபதி ஸ்ரீ நவகிரகம் ஸ்ரீ ஷுக்த ஹோமம் செய்து 90 நாட்கள் கழித்து நிலைமையை சொல்லுமாறு கூறினேன். சென்ற ஜூன் மாதம் வந்து தன நிலையை கூறிவிட்டு ஆசிவாங்கி சென்றார். ஏன் ஏனினில் இன்றைய கால கட்டத்தில் எவ்வளவு  அறிவியல் முன்னேறினாலும் ஜோதிட சாஸ்திரம் மூலம் நிதானமாக ஆராய்ந்தால் வழி கிடைக்கும்  என்பதை ஜோதிடர்கள் தெரிந்து கொள்ளலாம்.
                                                      வாழ்க ஜோதிட கலை

Friday, August 13, 2010

காணாமல் போன நகை எங்கே உள்ளது? திரும்ப கிடைக்குமா?


அன்புள்ள ஜோதிட அபிமானிகள், ஜோதிடர்கள் ஜோதிடம் பயிலும் மாணவர்கள், அனைவர்க்கும் PHR – இன் GV system படி மேற்படி விஷயங்கள் எவ்வாறு சொல்லபடுகிறது என்பது இக்கட்டுரையின் நோக்கம்.
மதுரையிலிருந்து வந்த ஒரு நபர், தன் வீட்டில் மனைவியின் நகை இவைகளை மூன்று மாதங்களாக வீட்டில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. வீட்டில் இருக்கிறதா? அல்லது தொலைந்துவிட்டதா? என்று கேட்டார். PHR – இன் GV system படி அதிக கணிதம் மற்றும் கணினி உதவி இல்லாமல் 10 நிமிடத்தில் அவர்களுக்கு விடை சொல்லி, என் வீட்டில் இருந்து மதுரைக்கு தொடர்புகொண்டு இருக்கும் இடத்தை கூறி பார்க்க சொன்னார். அவர் மனைவி 10:52 AM மணிக்கு நகை கிடைத்ததை கூறி சந்தோஷப்பட்டார்.
எப்படி எனில்?
அன்றைய கிரக நிலை.
05/04/2010 காலை 10:40 AM.

சூ புத சுக் சந்

ல கே


சூ கே
குரு
சந்
குரு
ராசி
செவ்
சனி
அம்சம்
ராகு


சனி (வ)

சுக்
செவ் ராகு
புத

எம்முடைய PHR – இன் GV system தில் அம்சம் பிரதானம். அன்றைய லக்னம் மிதுனம் / மகரம். அதாவது திருவாதிரை 2ல் லக்னம்.
லக்ன சூச்சமம் குரு. குருவின் அதி சூச்சமம் சுக்ரன். PHR – இன் GV system தில் 10 ம் பாவத்திற்கு முக்கியம் உண்டு. அதன் படி மிதுனத்தில் திருவாதிரை 2ல் லக்னம் இருக்கும்போது 10 ம் பாவத்தில் உத்திரட்டாதி 3 என்று வரும். அது அம்சத்தில் துலாத்தில் அமையும். துலத்தில், செவ்வாய் ராகு இருக்கிறார். காணமல் போனது பொருள் என்பதால் லக்னத்திற்கு நாலாம் பாவம் முக்கியம். திருவாதிரை 2 ல் லக்னம் இருக்கும்போது கன்னியில் அஸ்தம் 1 என்று வரும். அது மேஷத்தில் அமையும். மேஷத்தில் சூரியனும் கேதுவும் உள்ளார். செவ்வாய், ராகு, சூரியன், கேது பரஸ்பரமாக பார்ப்பதால் கண்டிப்பாக பொருள் கிடைக்கும் என்று கூறப்பட்டது. லக்ன அதி சூச்சமம் சென்று அதில் செவ்வாய் சூச்சமம் வந்ததால் பொருள் என்று சொல்ல கூடிய நாலாம் பாவம் கன்னியில் சித்திரை நட்சத்திரம் உள்ளதை அறிந்தோம். காட்டில், தலையணை, டர்பன், பர்ஸ் இவைகளை குறிக்கும். செவ்வாயுடன் ராகு சேர்ந்ததால் அதன் சூச்சமம் சந்திரன் ஆகிறார். பொருள் வட்டமானது, செயின், டாலர், நெத்திசூட்டி, இவைகளை குறிக்கும்.
சந்திரன் அம்சத்தில் மிதுனத்தில் உள்ளார். மிதுனம் வீட்டின் தென்கிழக்கு பகுதியை குறிக்கும். மிதுனம் அலமாரி, புத்தக அடுக்கு, கணனி உள்ள இடம், சூட்கேஸ் இவைகளை குறிக்கும். செவ்வாய் பூச நட்சத்திரத்தில் உள்ளதால் பூசத்தின் காரகத்துவம் பட்டு, பனியன், மஞ்சள், நீலம், பச்சை புடவைகளை குறிக்கும். மேலும் பூசத்திற்கு  உண்டான சனி அம்சத்தில் கும்பத்தில் இருப்பதால் பொருள் மறைந்து உள்ளது என்பதையும், ஸ்திர ராசி என்பதாலும் வீட்டில் தான் இருக்கும் என்று உறுதியாக சொல்லப்பட்டது. அது மஞ்சள் பட்டு புடவையில் மறைந்து இருந்தது என்று கூறப்பட்டது. வந்து கேட்டவர்கள் பிராமண சமூகத்தை சேர்ந்தவர்கள். என் மூளை உடனே வேலை செய்தது. லக்னம் ராகுவில் குரு சூச்சமத்தில் உள்ளார். குரு பூரட்டாதியில் கண்டமாகிறார். எனவே ராகுவின் வருடம் 18, அதில் பாதி 9. எனவே 9 கஜ புடவையில் இருக்கும் என்றேன். பிராமணர்கள் விசேஷ காலத்தில்தான் பெண்கள் 9 கஜ புடவை கட்டும் பழக்கம் உடையவர்கள். அவர்களுக்கு பர்ஸ் போன்ற பொருளில் மேற்படி நகை இருந்ததை சொன்னேன். மகர லக்ன முடிவு காலை 10:46AM. எனவே லக்னம் கும்பம் போகும்போது பத்தாம் பாவத்தின் அதிபதி, சுக்ரன், செவ்வாய் பரிவர்த்தனை.
லக்னத்தை செவ்வாய் பார்க்கும் போது கிடைக்கும் என்று கூறினேன். அதே போல் தொலை பேசியில் தொடர்புகொண்டு கேட்ட போது கிடைத்ததாக சொன்னார்கள். சொல்லும் போது மணி காலை 10:52AM.
நகை விவரம்:
11/2 பவுன் செயின். ¼ பவுன் டாலர் தலா 1 பவுனில் இரண்டு வளையல். விசேஷ காலத்திற்கு சென்று வந்த பிறகு புடவையை அயர்ன் செய்து அத்துடன் மேற்படி நகையை உள்ள பர்சை சூட்கேஸில் வைத்தது நினைவிற்கு வந்தது என்று சொன்னார்கள். வந்தவரோ அதிர்ச்சியிலிருந்து மீளுவதற்கு சிறிது நேரம் ஆனது.
இது ஸ்ரீ பகவதியின் கருணையும் என் குருநாதர் PHR – இன் ஆசியும் காரணமானது.
வாழ்க குருநாதர் புகழ்!!! வளர்க ஜோதிட கலை!!!
சுபம்!!!