Friday, August 13, 2010

காணாமல் போன நகை எங்கே உள்ளது? திரும்ப கிடைக்குமா?


அன்புள்ள ஜோதிட அபிமானிகள், ஜோதிடர்கள் ஜோதிடம் பயிலும் மாணவர்கள், அனைவர்க்கும் PHR – இன் GV system படி மேற்படி விஷயங்கள் எவ்வாறு சொல்லபடுகிறது என்பது இக்கட்டுரையின் நோக்கம்.
மதுரையிலிருந்து வந்த ஒரு நபர், தன் வீட்டில் மனைவியின் நகை இவைகளை மூன்று மாதங்களாக வீட்டில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. வீட்டில் இருக்கிறதா? அல்லது தொலைந்துவிட்டதா? என்று கேட்டார். PHR – இன் GV system படி அதிக கணிதம் மற்றும் கணினி உதவி இல்லாமல் 10 நிமிடத்தில் அவர்களுக்கு விடை சொல்லி, என் வீட்டில் இருந்து மதுரைக்கு தொடர்புகொண்டு இருக்கும் இடத்தை கூறி பார்க்க சொன்னார். அவர் மனைவி 10:52 AM மணிக்கு நகை கிடைத்ததை கூறி சந்தோஷப்பட்டார்.
எப்படி எனில்?
அன்றைய கிரக நிலை.
05/04/2010 காலை 10:40 AM.

சூ புத சுக் சந்

ல கே


சூ கே
குரு
சந்
குரு
ராசி
செவ்
சனி
அம்சம்




ராகு


சனி (வ)

சுக்
செவ் ராகு
புத

எம்முடைய PHR – இன் GV system தில் அம்சம் பிரதானம். அன்றைய லக்னம் மிதுனம் / மகரம். அதாவது திருவாதிரை 2ல் லக்னம்.
லக்ன சூச்சமம் குரு. குருவின் அதி சூச்சமம் சுக்ரன். PHR – இன் GV system தில் 10 ம் பாவத்திற்கு முக்கியம் உண்டு. அதன் படி மிதுனத்தில் திருவாதிரை 2ல் லக்னம் இருக்கும்போது 10 ம் பாவத்தில் உத்திரட்டாதி 3 என்று வரும். அது அம்சத்தில் துலாத்தில் அமையும். துலத்தில், செவ்வாய் ராகு இருக்கிறார். காணமல் போனது பொருள் என்பதால் லக்னத்திற்கு நாலாம் பாவம் முக்கியம். திருவாதிரை 2 ல் லக்னம் இருக்கும்போது கன்னியில் அஸ்தம் 1 என்று வரும். அது மேஷத்தில் அமையும். மேஷத்தில் சூரியனும் கேதுவும் உள்ளார். செவ்வாய், ராகு, சூரியன், கேது பரஸ்பரமாக பார்ப்பதால் கண்டிப்பாக பொருள் கிடைக்கும் என்று கூறப்பட்டது. லக்ன அதி சூச்சமம் சென்று அதில் செவ்வாய் சூச்சமம் வந்ததால் பொருள் என்று சொல்ல கூடிய நாலாம் பாவம் கன்னியில் சித்திரை நட்சத்திரம் உள்ளதை அறிந்தோம். காட்டில், தலையணை, டர்பன், பர்ஸ் இவைகளை குறிக்கும். செவ்வாயுடன் ராகு சேர்ந்ததால் அதன் சூச்சமம் சந்திரன் ஆகிறார். பொருள் வட்டமானது, செயின், டாலர், நெத்திசூட்டி, இவைகளை குறிக்கும்.
சந்திரன் அம்சத்தில் மிதுனத்தில் உள்ளார். மிதுனம் வீட்டின் தென்கிழக்கு பகுதியை குறிக்கும். மிதுனம் அலமாரி, புத்தக அடுக்கு, கணனி உள்ள இடம், சூட்கேஸ் இவைகளை குறிக்கும். செவ்வாய் பூச நட்சத்திரத்தில் உள்ளதால் பூசத்தின் காரகத்துவம் பட்டு, பனியன், மஞ்சள், நீலம், பச்சை புடவைகளை குறிக்கும். மேலும் பூசத்திற்கு  உண்டான சனி அம்சத்தில் கும்பத்தில் இருப்பதால் பொருள் மறைந்து உள்ளது என்பதையும், ஸ்திர ராசி என்பதாலும் வீட்டில் தான் இருக்கும் என்று உறுதியாக சொல்லப்பட்டது. அது மஞ்சள் பட்டு புடவையில் மறைந்து இருந்தது என்று கூறப்பட்டது. வந்து கேட்டவர்கள் பிராமண சமூகத்தை சேர்ந்தவர்கள். என் மூளை உடனே வேலை செய்தது. லக்னம் ராகுவில் குரு சூச்சமத்தில் உள்ளார். குரு பூரட்டாதியில் கண்டமாகிறார். எனவே ராகுவின் வருடம் 18, அதில் பாதி 9. எனவே 9 கஜ புடவையில் இருக்கும் என்றேன். பிராமணர்கள் விசேஷ காலத்தில்தான் பெண்கள் 9 கஜ புடவை கட்டும் பழக்கம் உடையவர்கள். அவர்களுக்கு பர்ஸ் போன்ற பொருளில் மேற்படி நகை இருந்ததை சொன்னேன். மகர லக்ன முடிவு காலை 10:46AM. எனவே லக்னம் கும்பம் போகும்போது பத்தாம் பாவத்தின் அதிபதி, சுக்ரன், செவ்வாய் பரிவர்த்தனை.
லக்னத்தை செவ்வாய் பார்க்கும் போது கிடைக்கும் என்று கூறினேன். அதே போல் தொலை பேசியில் தொடர்புகொண்டு கேட்ட போது கிடைத்ததாக சொன்னார்கள். சொல்லும் போது மணி காலை 10:52AM.
நகை விவரம்:
11/2 பவுன் செயின். ¼ பவுன் டாலர் தலா 1 பவுனில் இரண்டு வளையல். விசேஷ காலத்திற்கு சென்று வந்த பிறகு புடவையை அயர்ன் செய்து அத்துடன் மேற்படி நகையை உள்ள பர்சை சூட்கேஸில் வைத்தது நினைவிற்கு வந்தது என்று சொன்னார்கள். வந்தவரோ அதிர்ச்சியிலிருந்து மீளுவதற்கு சிறிது நேரம் ஆனது.
இது ஸ்ரீ பகவதியின் கருணையும் என் குருநாதர் PHR – இன் ஆசியும் காரணமானது.
வாழ்க குருநாதர் புகழ்!!! வளர்க ஜோதிட கலை!!!
சுபம்!!!

2 comments:

Anonymous said...

சும்மா தமாசு பன்ணாதிக

Anonymous said...

ஐயா,
இத மாதிரி நல்ல ஜோக்குகளை தொடர்ந்து வெளியிடவும்.

Post a Comment