Wednesday, August 11, 2010

என் கையில் உள்ள பொருள் என்ன..பிரசன்ன ஜோதிடம்!

இன்றைய கால கட்டத்தில் ஜோதிடத்தில் எவ்வளவோ வழிமுறைகள் இருந்தாலும் என்னுடைய P.H.R. – இன் G.V.system மிக மிக எளிமையான பிரசன்னம் ஆகும்.
உதாரணமாக: ஒரு பொருள் காணவில்லை அல்லது கையில் என்ன பொருள் உள்ளது, என் மகன் எவ்வளவு மதிப்பெண் வாங்குவான், இவை போன்ற பல கேள்விகளுக்கும் உடனடியாக பதில் சொல்ல முடியம்.

என்னிடம் வந்த பொருள் என்ன?
அன்புள்ள ஜோதிட பெருமக்கள் மற்றும் அபிமானிகள், மாணவர்கள் இவர்கள் அனைவரும் மிக மிக எளிமையான முறையில் ஜோதிடம் சொல்ல பழக வேண்டும். காரணம் இன்றைய நிலையில் ஜாதக ரீதியாக நாம் எவ்வளவு பலன்கள் சொன்னாலும் அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை. மக்கள் அனைவரும் அன்றாட நிகழ்ச்சிகளுக்கு தேவையை தான் கேட்கிறார்கள். வேலை எப்போழுது கிடைக்கும்? பணம் கடனாக கிடைக்குமா? எம்மகள் மகன் திருமணம் பற்றிய விஷயங்கள் அல்லது காதல் விஷயம், இன்று கடன் கொடுத்தவர் வருவரா? அவர் மூலம் அவமானம் பட வேண்டுமா? இன்று வெள்ளி, தங்கம், விலை உயருமா? குறையுமா? பங்குசந்தையில் லாபம் பெற முடியுமா? எந்த பங்கு எவ்வளவு வாங்கலாம்? விற்கலாம்? போன்ற கேள்விகளுக்கு ஜனன ஜாதகத்தில் இடமில்லை. அதாவது சொல்வது கடினம். அப்படி சொல்வதாக இருந்தால் ஜோதிடர் தன் அபிப்ராயத்தை வைத்து சொல்லுவார்கள். இது மதில் மேல் பூனை போல் அமையும். இதே ஜனன ஜாதகத்தை வைத்துக்கொண்டு இக்கட்டுரையின் தலைப்பிற்கு பதில் சொல்ல முடியுமா? எனில் முடியாது என்பது தான் உண்மை.
இதே போன்று எம்முடைய P.H.R. – இன் G.V.system தில் பல விஷயங்களை சொல்லி இருக்கிறோம். அதற்க்கு காரணம் குருவின் ஆசியும், ஸ்ரீ பகவதியின் கருணையும் தான். மேலே குருப்பிட்ட தலைப்பில் எம்மிடம் கேள்வி கேட்கப்பட்டது. கேட்டவர் என் மாணவர். அவர் தன் நண்பர்களுடன் பேசிக்கொண்டு ஜோதிடதையும் அதன் பிரிவான பிரசன்னதையும் என்னை பற்றியும் உயர்வாக பேசிகொண்டுயிருந்தார். அப்பொழுது என் மாணவரின் நண்பர் ஒருவர் ஒரு பொருளை கொண்டுவந்து கொடுத்தார். உடனே இன்னொரு நண்பர் ஏன் இதையே ஒரு கேள்வியாக உன் ஆசான் இடத்தில் கேட்கலாமே என்று கூறப்பட்டதால் என் மாணவரும் அதற்க்கு சரி என்று சொன்னவுடன் என்னிடம் தொலை பேசியில் மேற்படி விஷயங்களை கூறி பதில் கேட்டார்.
கேள்வி கேட்ட நாள் : 23/08/2007. காலை 11:39 மணி.
அன்றைய கோச்சார கிரகத்தை கொண்டு, கையில் உள்ள பொருள் திருப்பதி லட்டு என்று சொன்னேன். சுற்றி இருந்தவர்கள் அனைவரும் சந்தோசமாக கத்தியது தொலைபேசியில் காதில் விழுந்தது.
என் மாணவர் எவ்வாறு சொல்லப்பட்டது என்பதை கேட்டார்.


செ


சுக்
சந்
சூ செ சனி
ராகு
ராசி
சுக்

அம்சம்
பு கேது

கே சூ பு சனி
ராகு

சந்
குரு


குருலக்னம் : துலாம் / மிதுனம்.
ராசி ; தனுசு / மேஷம் / மூலம்.
P.H.R  - இன் GV system தில் அம்சம் பிரதானம். லக்ன சூச்சமம் புதன். இதன் அதி சூச்சமம் சந்திரன். சந்திரன் மூல நட்சத்திரத்தில் உள்ளது. 27 நட்சத்திரத்தில் மூலம் தெய்வீக நட்சத்திரம். எனவே கையில் உள்ள பொருள் தெய்வீகமானது என்றேன். அவர் அதற்க்கு சரி என்றார்.
அது என்ன பொருள்:
தனுசு ராசியின் அருகில் மகரம் ராசி உள்ளதால் அதில் திருவோணம் நட்சத்திரம் உண்டு. அது மஹா விஷ்ணுவின் அம்சம். கேதுவின் வருடம் ஏழு வருடங்கள். எனவே சந்திரன் மூலம் ஒன்னில் மேஷத்தில் இருப்பதாலும் அது மலையும் மலையை சார்ந்த இடமாகும். கேதுவின் வருடத்தை மலையுடன் சேர்த்தால் ஏழுமலை. அதாவது திருப்பதி ஆகும்.
சந்திரனுக்கு நாலாம் இடம் குருவகிறார். குரு மூக்கு கடலையின் அதிபதி.
அதிலிருந்து கடலை மாவு தயரிக்கபடுகிறது. சனி இனிப்புக்கு உண்டான கிரகம். குருவை பார்க்கிறார். இவை இரண்டும் சேரும்போது லட்டு ஆகிறது. இவ்வளவு எளிமையாக P.H.R.  – இன் GV system தில் மட்டுமே சொல்லமுடியும்.
இவை அனைத்தும் P.H.R இன் ஆசியும் ஸ்ரீ பகவதியின் கருணையும் காரணம் என்று கூறி இக்கடூரையை முடிக்கிறேன்.
வாழ்க குருநாதர் புகழ்!!! வளர்க பிரசன்ன ஜோதிடம்!!!!
சுபம்!!!!

No comments:

Post a Comment