Saturday, August 14, 2010

குடியிருக்கும் வீட்டில் செய்வினை தோஷம் உள்ளதா?

வணக்கம் ஜோதிட வாசகர்களே இக் கட்டுரையில் குடியிருக்கும் வீட்டில் தோஷம் உள்ளதா என்பதை பிரசன்னம் மூலம் எவ்வாறு அறிந்து கொள்வது என பார்போம். நம் ஜோதிடர்கள் தமது ஞானத்தை விரிவு படுத்திக்கொள்ளாமல் ஜாதகத்தை மட்டும் வைத்துக்கொண்டு சனி,குரு பெயர்ச்சிகளையும்,திசை,புத்தி, அஷ்டமசனி இவைகளை வைத்துக்கொண்டு,மேலும் துருவ கணிதம் தனது அனுமானத்தையும் சேர்ந்து பலன் சொல்கிறார்கள்.சில தெய்வாதினமாக சில நடந்து விடுகிறது.

PHR  இன்    GV சிஸ்டம் என்பது ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோர் போல யாருக்கு எது வேண்டுமோ அதை பெற்றுக்கொள்ளலாம். எளிய முறை சிஸ்டத்தில் கண்டறியப்பட்டு மனதளவிலும் குடும்ப அளவிலும் பிரச்னை தீர்ந்து நிம்மதியாக உள்ள விஷயமே கீழே கொடுக்க பட்டுள்ளது. எம்மிடம் வந்த நபர் தான் யார், தன வேலை, பொருளாதார வசதி பற்றி கூறி விட்டு, தான் சிறிதும் நிம்மதி இல்லாமல் இருக்க என்ன காரணம் என கேட்டார்.அவர் பல ஜோதிடர்களிடம் சில பரிகாரம் கேட்டு செய்து உள்ளார். ஆனால் நிரந்தர தீர்வு இல்லை என சொன்னார்.எல்லாம் வல்ல பகவதி அருளாலும், குருநாதர்  இன் ஆசியாலும் அவர் வந்த நேரத்தை கொண்டு பலன் சொன்னேன்.


30 .12 .2009 .மாலை 6 மணி 30 நிமிடம், புதன் கிழமை. அன்றைய கிரகநிலை கீழே,
கிரகம்            ராசி               அம்சம் 

லக்னம்          மிதுனம்        மேஷம்   
சூரியன்          தனுசு             சிம்மம்   
சந்திரன்         ரிசபம்            கன்னி       
செவ் (வ )      கடகம்         கும்பம்     
புதன்              தனுசு            விருட்சிகம் 
குரு                கும்பம்          துலாம் 
சுக்ரன்           தனுசு             கடகம்       
சனி                 கன்னி           மேஷம்    
ரகு                 தனுசு               தனுசு        
கேது             மிதுனம்          மிதுனம்     


PHRன் GV சிஸ்டத்தில் புனர்பூசம் 1 இல் லக்னம் . லக்ன சூட்சமம் சுக்ரன் அதி சூட்சமம் செவ்வாய். இவர் கும்பத்தில் உள்ளார்.ராசியில் மாந்தி செவ்வாய் சாரம் பெற்று அம்சத்தில் 8 இல் மறைகிறார். இந்த கிரக அமைப்பு வீட்டில் செய்வினை உள்ளதை காட்டியது. அது எங்கு உள்ளது என கூற முடியுமா?.வீட்டில் மேற்கு,(அ) வ .மேற்கு பகுதியில் என்றேன். வந்தவருக்கு ஒரே அதிர்ச்சி கொஞ்சம் விவரமாக கூறுங்கள் என்றும், மேற்கு, வ .மேற்கு கடவுள் வழிபாடுஇடம் உள்ளது (ஏன் எனில் கும்பம் தெய்வீகம்  உள்ள உயர்வான இடம் )என்றேன். தெய்வம் உள்ள இடத்தில செய்வினை இருக்க முடியுமா என்றார்.முடியும் முன்பு இருந்த வழிபாடு தற்சமையம் இல்லை என்றும் அங்கு இப்பொழுது தெய்வீக சக்தி இல்லாததையும் சொன்னேன்.அவர் ஒத்துக்கொண்டார்.

கும்பத்தில் செவ்வாய் ,அவரின் சூட்சமம் சுக்ரன்.சுக்ரன் கண்ணாடிக்கு உண்டான கிரகம். எனவே சுக்ரனை பிளாஸ்டிக்காக கொண்டு அதில் சுற்றப்பட்ட ஒரு தகடு உள்ளது(செவ்வாய் செம்புக்கு அதிபதி) என்றேன்.அவை எந்த இடத்தில் உள்ளது என்றார். மீண்டும் செவ்வாயின் சூட்சுமமும்,சுரணை கொண்டும் ஆராய்ச்சி செய்ததில் சுக்ரன் சாரம் மூலம்.மூலம் ஆஞ்சநேயர் நட்சத்திரம் எனவே ஆஞ்சநேயர் போட்டோவில் இருக்கும் என்றேன்.செவ்வாயில்  லக்ன சூட்சுமம் உள்ளதால் உன் சகோதரன் மூலம் செய்வினை செய்யப்பட்டது என்ற உடன் கண்ணீர் விட்டுவிட்டார்.

அவர் கூறியதாவது அய்யா,நான் ஆஞ்சநேயர் பக்தன்.என் சகோதரன் எனக்கு பிரேம் போட்டு அப்படத்தை கொடுத்தார் நானும் அதை வழிபட்டு வந்தேன் இப்போது என்ன செய்ய வேண்டும் என்றார். வருத்த பட   வேண்டாம் ஸ்ரீ பகவதி அருளால் நல்லது நடக்கும் என கூறி அவருக்கு ஸ்ரீ பகவதி பிரசாதம் கொடுத்து வலது கையில் கட்டிக்கொண்டு படத்தில் உள்ள தகடை எடுத்து அதை ஒரு நீர் நிலையில் போட்டு விடவும் என்றேன். மறுநாள் காலையில் எடுத்தபோது வீட்டில் உள்ளவர்கள் அதிசயத்துடன் பார்த்தனர் என்றும் நீங்கள் சொல்லியபடி செய்து  விட்டேன் என்றும் எனக்கு போனில் தகவல் சொன்னார்.

வீட்டில் ஸ்ரீ கணபதி ஸ்ரீ நவகிரகம் ஸ்ரீ ஷுக்த ஹோமம் செய்து 90 நாட்கள் கழித்து நிலைமையை சொல்லுமாறு கூறினேன். சென்ற ஜூன் மாதம் வந்து தன நிலையை கூறிவிட்டு ஆசிவாங்கி சென்றார். ஏன் ஏனினில் இன்றைய கால கட்டத்தில் எவ்வளவு  அறிவியல் முன்னேறினாலும் ஜோதிட சாஸ்திரம் மூலம் நிதானமாக ஆராய்ந்தால் வழி கிடைக்கும்  என்பதை ஜோதிடர்கள் தெரிந்து கொள்ளலாம்.
                                                      வாழ்க ஜோதிட கலை

No comments:

Post a Comment