Saturday, August 14, 2010

ஜோதிடத்தில் ஸ்ரீராமஜெயம்

அன்புள்ள ஜோதிடர், மற்றும் ஜோதிட அபிமானிகள், ஜோதிட மாணவர்கள் இவர்கள் அனைவர்க்கும் மேலே கொடுக்கப்பட்டு தலைப்பு வித்தியாசமாகவும், ஆச்சிர்யமகவும் இருக்கும். ஜோதிடம் என்பது ஜோதிடத்தில் இல்லை என்பதை கூறியுள்ளேன். நாம் பார்ப்பது, பேசுவது, எழுதுவது, நிற்பது, உண்பது மற்றும் பலதரப்பட்ட விஷயங்களில் ஜோதிடம் உள்ளது.
மேலும் நம் இதிஹாசம், புராணம், நீதி கதைகள் இவைகள் அனைத்திலும் நம் வாழ்க்கைக்கு தேவையான அத்தனை விவரமும் இருக்கிறது. இதில் நான் ஜோதிடத்தில் இவைகளை பயன்படுத்தி பிரசன்னம் சொல்லுகிறேன். எப்படி எனில் உதாரனமாக ஸ்ரீ ராமஜெயம் என்ற எழுத்தில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் ஒரு நட்சத்திரத்தையும் அதன் அதி தேவதை, மரம், மிருகம் இவைகளை குறிக்கும்.
ஸ்ரீ ராமஜெயத்தின் வலிமையை புராணிகர்கள் பயன்படுத்திய விதம் கதா காலட்சேபம் ஆன்மிக சொற்பொழிவு இவைகளில் கேட்டு இருப்பீர்கள். ஆனால் இதை என் குருநாதர் சொல்லி கேட்ட விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். பஞ்சாங்கத்தில் 27 நட்சத்திரத்தில் விளக்கம் இருக்கிறது.
ஸ்ரீ – உத்திரட்டாதி நட்சத்திரம் – பசு
ரா(ர) – சித்திரை நட்சத்திரம் – புலி
ம(ம்) – மகம நட்சத்திரம் – எலி.
ஜெ(ஜே) – திருவோணம் நட்சத்திரம் – குரங்கு.
ய – கேட்டை நட்சத்திரம் – மான்.
ம்(மா) – மகம் நட்சத்திரம் – எலி.

ஸ்ரீ என்ற எழுத்தின் தத்துவமே லக்ஷ்மியை குறிக்கும். லக்ஷ்மியின் கணவர் மஹா விஷ்ணு. அவதாரம் – பெருமாள். குடிகொண்ட இடம் திருப்பதி. எனவே ஸ்ரீ என்ற சொல் உத்திரட்டாதி நட்சத்திரம் என்பதால் திருப்பதியை குறிக்கும்.
ரா – சித்திரை நட்சதிரம், புலி வாகனம். துர்க்கைக்கு உடையது.
ம – மகம் எலியை குறிக்கும். எலி விநாயகரின் வாகனம்.
ஜெ – தைரியத்தையும், ஆத்ம பலனையும் குறிக்கும்.
சித்திரை நட்சத்திரம் திருமண பந்தத்தையும் குறிக்கும். அதாவது இணைப்பு நட்சத்திரத்தை குறிக்கும். இதனால் ரா என்ற எழுத்து இணைப்பை குறிக்கும். மேஷதிர்க்கு ஐந்தாவது ராசி சிம்மம். இதில் மா, ம் என்ற எழுத்துகள் உண்டு. ஐந்தாவது ராசியை குழந்தையை குறிக்கும். பத்தாவது ராசி மகரம். அதில் உத்தராடம், திருவோணம் நட்சத்திரம் உண்டு. உத்தராடம் ஜீ எழுத்தை குறிக்கும். ஜீவன் + வெற்றி. அதாவது ஜீவன் + வாழ்க்கை இதைதான் ராம் என்பார்கள். திருமணம், குழந்தை, வாழ்கை, ஜெயம் இவைகளை குறிப்பதால் ஸ்ரீ ராமஜெயம் என்று வந்தது.
மேலும் ம், மா இவை மக நட்சத்திரம் என்பதால் அதின் அதி தேவதை சுக்ரன். சுக்ரன் கர்பிணி கிரகம். அதாவது குழந்தை செல்வத்தை குறிக்கும். வெற்றி அடைவதற்கு(ஜெ). திருவோண நட்சத்திரம், குரங்கு ஆகும். குரங்கை கொடியில் கொண்டு பாரத போரில் கிருஷ்ணன் ஜெயித்தார். ராவணனை வெல்வதற்கு ஹனுமான் இருந்தார். ஆதலால் பயம் இல்லாமல் இருப்பதற்கும், வெற்றிக்கும் நம் முன்னோர்கள் ஹனுமான் வழிபாடு செய்தார்கள்.
ஜெ – எங்கு உள்ளதோ அங்கு வெற்றி, குழந்தை, ஐஸ்வர்யம், இவைகளை கொடுக்கும். இவை அனைத்தும் இருந்தாலும் அனுபவிக்க கூடிய உணர்வு இல்லை எனில் பலன் இல்லை. ய என்ற எழுத்து கேட்டை நட்சத்திரத்தை குறிக்கும். அதிபதி இந்திரன். அவன் இந்திரியங்களுக்கு அதிபதி. இதனால்தான் ஜெ-க்கு அடுத்தது ய வந்தது.
அதுவே ஸ்ரீ – செல்வம் --- ரா – திருமணம் --- ம – குழந்தை --- ஜெ – வெற்றி --- ய – உணர்வு --- ம் – பேர குழந்தையை குறிக்கும்.
இதுவே ஸ்ரீ ராம ஜெயம்.
எப்படி!!!!!!!!! ஜோதிடத்தில் ராம ஜெயத்தின் மகிமை.
வாழ்க குருநாதர் புகழ்!!! வளர்க ஜோதிடம்!!!
சுபம்!!!

2 comments:

Anonymous said...

how i want see the god. How?

Anonymous said...

pls tell me
by
iyyappan

Post a Comment