Sunday, August 29, 2010

ஸ்ரீ காளஹஸ்தி கோபுரம்.

ஸ்ரீ காளஹஸ்தி கோபுரம்.
வணக்கம்!!
அன்புடைய ஜோதிட நண்பர்கள், அபிமானிகள், ஜோதிட மாணவர்கள், அனைவரும் ஜோதிட ரீதியாக அறிந்துகொள்ள ஸ்ரீ காளஹஸ்தி கோபுரம் அடியோடு சரிந்து விழுந்ததால் நாட்டில் ஏற்பட போகும் சங்கடங்கள் இவைகளை P.H.R-இன்  GV system மூலம் மிக எளிதாக சாதாரண மாணவர்கள் கூட புரியும்படி சொல்லிருக்கிறேன்.
திரு காளஹஸ்தி கோபுரம் 26.05.10 இரவு 08:05 மணிக்கு சரிந்து விழுந்தது என்று செய்தி வெளியிடப்பட்டது (செய்திதாள்: காலைக்கதிர்).
வைகாசி 12 – விசாகம்.
குரு
பு
சூ
சுக் கே


சூ செ கே
ல சந்


ராசி

சனி சுக்
அம்சம்


செ

குரு பு
ல ரா

சந்
சனி


ரா


கோபுரம் விழுந்த இடம் ஆந்திரா மாநிலம். காளஹஸ்தியில்
ஸ்தலம்: ராகு / கேது கிரகத்திற்கு உட்பட்டது.
உலக லக்னம்: மேஷம்.
எந்த ஒரு நாடாக இருந்தாலும் அதன் தலை நகரம் மேஷமாகும். அதே போல் ஒவ்வொரு மாநிலத்தின் தலை நகரம் மேஷம். (இது P.H.R-இன்  GV system முறை). மேலும் இம்முறை மேஷத்திலிருந்து ஆரம்பிக்கும். அம்சமே பிரதானம் என்பதால் மேஷத்தில் சூரியன், செவ்வாய், கேது அமர்ந்து உள்ளார். ஐந்தாம் இடம் சிம்மம், அதிபதி சூரியன்.
சூரியன் ரோகினி சாரம் பெற்று செவ்வாய், கேதுவுடன் அமர்ந்துள்ளார். செவ்வாய், கேது நாட்டின் சட்ட சிக்கலை குறிக்கும். ரோகினி என்பது பெண்ணை குறிக்கும். நாட்டின் முக்கிய தலைவர்களைகையும், பெண் தலைவர்களையும் உடல் ரீதியாகவும் மன ரீதியகவும், அரசியல் ரீதியாகவும் பாதிப்பு ஏற்படும். கேது புனர்பூச நட்சத்திரத்திலும், செவ்வாய் கேதுவின் சாரத்தில்(மகம்) உள்ளார். மகம் விவசாயம், அரசியல், வன்முறைக்கு பயன்படுத்தும் ஆயுதங்கள் இவைகளை குறிக்கும். புனர்பூசம் நட்சத்திரம் ராமர், அயோத்தி, பிரிக்கும் தன்மை இரட்டை நகரம், இரட்டை குழந்தை, கோவில், பதவியை இழத்தல், இவைகளை குறிக்கும். இதே போல் இன்னும் பல காரகத்துவம் உண்டு. இக்கட்டுரைக்கு தேவையானதை மட்டும் நான் எடுத்துள்ளேன். குருவின் காரகம் தங்கம். அதாவது வளையல், செயின், தோடு, இதுபோன்ற உருவம் செய்யப்பட்ட ஆபரண தங்கத்தை குறிக்கும். சொக்க தங்கத்தை சனி குறிக்கும். சூரியன் மேஷத்தில் ரோகினியில் உள்ளார். சந்திரனின் மனைவி ரோகினி. மிகவும் அழகான பெண். தட்சனின் இருவத்தி ஏழு பெண்களை திருமணம் செய்து கொண்டது புராணத்தில் உள்ளது.
சூரியன் ரோகினி சாரத்தில் உள்ளதால் மிக பிரகாசமாக இருக்கும். குருவுக்கு தங்கம். ஹிந்தியில் சோனா. பிரகாசம் என்பதன் மற்றொரு பெயர் தேஜஸ் அல்லது காந்தி. இவை இரண்டையும் இணைத்தால் காங்கிரசின் தலைமையை குறிக்கிறது. செவ்வாய் சிகப்பு நிறத்தையும், சூரியன் சந்திரனின் சாரம் பெற்றதால் வெண்மையும், கேது புதன் வீட்டில் அமர்ந்ததால் பச்சை நிறத்தை குறிக்கும். அக்கட்சியின் கொடியை உணர்த்துகிறது. எனவே அம்மையார் அவர்களுக்கு அக்கட்சியில் உள்ளவர்களால் அம்மாநிலத்தில் அவப்பெயர் உண்டாகும். மேலும் சூரியன் பிதா காரகர் ஆவார். பிதாவை ஐயா என்றும் சொல் வழக்கில் உள்ளது. உதய சூரியனின் நிறம் ரோஸ். எனவே அம்மாநிலத்தின் முதல்வர் பெயரில் ரோசையா (ரோஸ் + அய்யா) உள்ளார். அவருக்கும் தன் சகாக்களால் தர்மசங்கடம் உண்டு.
P.H.R-இன் GV system மேஷம், ரிஷபம், மிதுனம் – கிழக்கு.
கடகம், சிம்மம், கன்னி – தெற்கு.
சிம்மத்தில் குரு இருப்பதால் அக்கோவிலின் தெற்கு புரத்தில் தங்கத்தை பெயர் கொண்ட ஆறு உண்டு (ஸ்வர்ணமுகி). ராசி மற்றும் அம்சம் சக்கரத்தில் மேஷதிர்க்கு ஏழாம் இடம் நிவர்த்தி ஸ்தானம். அதில் ராகு அமர்ந்து உள்ளார். ராகு கண்ட நட்சத்திரமான பூரடத்தில் உள்ளார். தோஷ நிவர்திக்கான பூஜைகள், ஹோமங்கள், இவைகள் செய்ததால் கோபுரம் பாத்திப்பு ஏற்பட்டது. கோவில்லுக்கு என்று தோஷ நிவர்த்தி செய்துகொள்ளாததும் காரணமாகும்.
சென்னை மாகாணம் பிரிப்பதற்கு முன்பு தமிழ் நாட்டில்தான் ஸ்ரீ காளஹஸ்தி கோவில் இருந்தது. எனவே தமிழ் நாட்டின் அரசியலிலும் திடீர் மாற்றம் வரும் வாய்ப்பை கிரகங்கள் கூறுகிறது. ஹஸ்த நட்சத்திரம் என்பது கையை குறிக்கும். அதன் அதி தேவதை சூரியன். எனவே காங்கிரசிற்கும், தமிழக அரசியலுக்கும் தொடர்பு உண்டு. பூர்விகத்தை ஆந்திராவாக கொண்ட அரசியல் தலைவர்கள், நிலசுவாந்தார்கள், பிரபுக்கள், இவர்கல்லுகும் சங்கடம் ஏற்படும் என தெரிகிறது. காரணம் மறுநாள் இரவு கேது திருவாதிரை 4 ல் மாறப்போகிறார். திருவாதிரை ருத்திரன் பிறந்த நட்சத்திரம்.
மிதுனம் தென் கிழக்கை குறிக்கும். அம்சத்தில் கேது குரு வீட்டில் அமர்வதால் குரு வேதத்திற்கு அதிபதி ஆவார். அம்சத்தில் குரு சிம்மத்தில் உள்ளார். சிம்மம் மலையும் மலையை சார்ந்த இடம். அதற்க்கு வனம், ஆரண்யம் என்றும் பெயர் உண்டு. வேதம் + ஆரண்யம் = வேதாரண்யம் என்று பெயர் உண்டு. அங்குள்ள சிவன் பெயர் வேதபுரீஸ்வரர் என்ற பெயர் உண்டு. மீனம் கடல் பகுதி ஆகும். சிம்மத்தில் குருவுடன் புதன் உள்ளார். புதன் பரணி நட்சத்திரத்தில் உள்ளார். சுக்கிரன் சாரம். சுக்ரன் + புதன் இணையும் பொழுது ரங்கநாதரை குறிக்கும். ரங்கநாதர் பள்ளி கொண்ட இடம் ஸ்ரீரங்கம். இந்த புதனை கும்பதிலிருந்து சுக்ரன் + சனி பார்வை பெறுகிறார்.
கும்பம் என்பது கலசம், கோபுரம் என்றும் சொல்லபடுவதுண்டு. மேஷத்திர்க்கு பாதக ஸ்தானத்திலிருந்து பார்ப்பதால் அக்கோவிலில் திடீர் பாதிப்பு ஏற்படும்.
ஆடி 13, 14 இரவு செவ்வாய் உத்திரம் நாலில் சனியுடன் கூடும்போது திடீர் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதையும் கிரகங்கள் குறிக்கிறது. இதை இன்னும் விரிவாக எழுதவே மனம் நினைத்தாலும் ஏதோ ஒரு காரணத்தினால் இதனை நிறைவு செய்கிறேன்.
எல்லாம் வல்ல ஸ்ரீ பகவதி நாட்டையும், நாட்டு மக்களையும், அரசியல் தலைவர்களையும் காக்கட்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்.
சுபம்!!!
கட்டுரை எழுதிய நாள்: 27/05/2010.

No comments:

Post a Comment