Monday, March 18, 2013

தமிழக முதல்வர் ஜெ.ஜெ. நாளை நமதே. 40 ம் நமதே.ஜோதிட ஆய்வு.


எனது அருமை மாணவர்களுக்கு P.H.R ன்  G.V. சிஸ்டம் மூலம் வாழ்த்துக்களையும்,ஆசிகளையும் சொல்லிக்கொள்கிறேன்.

இன்றைய தமிழ் நாட்டில் மற்றும் டெல்லி வரை ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களை எல்லாம் வல்ல ஸ்ரீ பகவதி ஆசிர்வதிக்கட்டும்.
தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் ஜனன ஜாதகத்தில் தற்சமயம் நடைபெறுகின்ற உயிதிசையை வைத்து மற்றும் ஓர் ஆய்வுக்கட்டுரை.

உயிர்திசை சனியில் சுக்ரன் புத்தியில் சந்திரன் அந்தரம் 26.02.2013 முதல் 01.06.2013.வரை. சந். கேதுவின் சாரம் பெற்று 2..5..12.ஐ குறிக்கிறார் (அம்சத்தில்). மேலும் திசா நாதனுக்கு 10 ல் கேது.  புதனும் கேதுவும் சூஷ்ம பரிவர்த்தனை.எனவே நினைத்ததை சாதிக்கும் காலமாக அமைகிறது. கேது ஜல ராசியில் இருப்பதால் நதி நீர் சம்பந்தப்பட்ட விஷயத்தில் வெற்றி உறுதியாகும்.

01.06.2013 முதல் 08.08.2013 வரை செவ்.அந்தரம். செவ்வாய் சனிசாரம் எனவே திடீர் சந்திப்பாக டெல்லித் தலைமையுடன் பேச்சுவார்த்தை ஏற்படும். ராசியில் செவ்வாய்க்கு 7-க்குடையவர் சனி,அம்சத்தில் செவ்.க்கு 8-ல் மறைகிறார். இதனால் அரசியலில் பெரிய மாற்றத்தை உண்டு பண்ணும். எதிக்கட்சி M.L.A.  M.P.மற்றும் தொண்டர்கள் அ.தி.மு.க.வில் இணைவார்கள்.

09.08.2013 முதல் 29.01.2014 வரை ராகுவின் அந்தரம் நடப்பதால் கன்னிராகு (அம்சத்தில்) இந்திய அரசில் முக்கிய பொறுப்புகளை அளிக்கும். அது சம்பந்தமான பேச்சு ஆரம்பம் ஆகும்.

29.01.2014.முதல் 01.07.2014 வரை குருவின் அந்தரம். குரு 4ம் இட்த்தை குறிப்பதால் இவருக்கு உடல் நல பாதிக்க வாய்ப்புக்கள் உண்டு கவனம் தேவை.

சனிதிசைக்கு குரு 3-7-10-குறிக்கும் அவர் சாரம் செவ். எனவே செவ் 6-11-4 ஆகிய இடங்களையும் குறிக்கிறது. எனவே 11 ல் லக்னாதிபதி புதன் கேதுவின் அசுவினி நட்சத்திர சாரம் பெறுவதால் அசுவினி நட்சத்திரத்தின் ஆதிபத்தியமான தலை நகர், உயர்பதவி,கிரீடம். 

எனவே இவர் மேற்சொன்ன உயர்பதவி கிரீடம் போன்றவற்றை கண்டிப்பாக அலங்கரிப்பார்.

G.V.விஸ்வநாத சர்மா.சேலம்.
94438 91441. 9487127100
0427-2401053.
12.03.2013.       

Friday, December 30, 2011

தமிழகத்தைப் பொருத்தவரை புத்தாண்டு 2012 எப்படி இருக்கும்


அன்புடைய ஜோதிட அபிமானிகளுக்கு 2012ம் வருடம் பற்றிய பொதுபலனாக நமது தமிழகத்தைப்பொருத்தவரை எப்படி இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாக உள்ளது.எனவே PHR ன் G.V. சிஸ்டப்படி ஆராய்ந்து விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டைப்பொருத்தவரை முதல்வர் அவர்கள் ஆட்சிப்பீட்த்தில் அமர்ந்த நேரம் கொண்டு கணிக்கப்பட்ட்து. ஏனெனில் பதவி ஏற்ற நாளில் இருந்து தான் நிர்வாகம் நடைபெறுகிறது. பதவி ஏற்ற நாளின் நேரத்தில் இன்றைய வருட பொதுப்பலனை ஆய்வு செய்து அளித்துள்ளேன்.
பதவி ஏற்ற 2011-05-16 திங்கட்கிழமை பகல் 12.47க்கு வந்த லக்னத்தை கொண்டு பலன்கூறவேண்டும்.

புதுவருடம் மார்கழி 15ம் நாள் சனி/ஞாயிறு 12.00 அம் 01.01.2012 வருட பிறப்பு. அன்றுள்ள காலகட்டத்தில் உள்ள கிரகநிலையை வைத்து, பதவி ஏற்றநாளில் உள்ள லக்னத்தையும் வைத்து பார்க்கவேண்டும். எப்படியெனில் கீழே உள்ள கிரகநிலையை பாருங்கள்.

பதவி ஏற்ற 2011-05-16 திங்கட்கிழமை பகல் 12.47க்கு வந்த லக்னம் சிம்ம்ம்/மிதுனம்
01.01.2012 வருட பிறப்பு கிரகநிலை ராசி: மீனம்/துலாம்/உத்திரட்டாதி.

ஆட்சியாளரின் சூரியனை வைத்துதான் பலன் கூறவேண்டும் (அதாவது உயிர்திசை) முதல்வரின் (J.J.) ஜாதகத்தில் சூரியன் பரணி 4ல் உள்ளார். அதன்படி தற்போது 17.06.2011 முதல் 26.07.2012 வரை சனிதிசையில் கேதுபுக்தி நடைபெறுகிறது.

இப்போது வருடபலன் ஜாதகத்தைப் பார்க்கவும். எமது P.H.R ன் G.V. சிஸ்டம் அம்சம் பிரதானம். எனவே வருடபிறப்பில் பதவி ஏற்ற லக்னம் மிதுனம். மிதுனத்தில் கேதுவுடன் சுக்கிரன் உள்ளார். 1. 4. 9.ஐ கேது குறிப்பதாலும் அது திசா நாதன் சனிக்கு 8ல் மறைவதாலும் பல இன்னல்களுக்கு ஆளாகநேரிடும்.

7ம் இடஅதிபதி குரு, கேதுசாரம் பெறுவதும், கேது சந்திரன் சாரம் பெறுவதால் எதிரிகள்,அனுகூல சத்ருக்கள் மூலம் மனவலிமையை இழக்கநேரிடும் வாய்ப்பு உண்டு.

ஆனால் 26.07.2012 க்கு பின்பு சுக்கிரன் புக்தி ஆரம்பம் ஆவதால் சுக்ரன் தன் வீடான 5,மற்றும் 12ம் பாவத்திற்கு வலிமைச்சேர்க்கிறார். 5ம்வீட்டிற்கு 3லும், 12ம்வீட்டிற்கு 2லும், அமர்வு சிறப்பு உண்டு. சுக்ரன், சந்திரன் சாரம் பெற்று,5ம் வீட்டை குறிப்பதால் முரட்டு தைரியத்தைக் கொடுப்பார். தான் நின்ற வீட்டின் அதிபதி புதன் கும்பத்தில் சுயசாரம் ஏறியதால் உயரிய பதவிகள் தேடிவரும்.

9, 10, 11, இடங்கள் ஆட்சிக்கு முக்கியமானது. லக்னத்திற்கு 12ல் குரு இருந்தாலும் காலசக்கரத்திற்கு அது 2ம் இடம். எனவே இந்தியாவைப் பொருத்து 2வது தலைமையிடம் அமையும். தமிழ்நாட்டிற்கு மகரம் ராசி ஆகும். மகரத்திற்கு 11ல் சனி,செவ், கூடியுள்ளதால் விவசாய துறையில் தொய்வு ஏற்ப்பட்டு விலகும். எதிரணியினர் மீண்டும் ஒன்று சேர்ந்து கூட்டணியாக பாராளுமன்ற தேர்தலைச் சந்திப்பார்கள்.விவசாய துறையில் புதிய கண்டுப்பிடிப்புகள் வெளிவரும்.  

11ல், மாந்தி இருப்பதாலும், அதன் அதிபதி செவ்வாய், சனியுடன் கூடி இருப்பதால் ஓய்வு பெற்ற I.A.S.,  I.P.S., அதிகாரிகள் கொண்ட சிறப்பான குழு ஒன்றை ஆரம்பிக்கவேண்டி வரும். இக்குழு மூலம் சில முடிவுகள் தமிழகத்திற்கு சாதகமாக அமையும். தற்சமயம் உள்ள வழக்குகள் மேல்முறையீடு செய்யப்படும், தண்டனை கிடையாது.

திசாநாதன் சனிக்கு 1, 4, 7, 10,ல் கிரகம் வலுத்து சதுர்கேந்திர யோகம் எனவே தமிழக சர்க்காருக்கு சரிசமமான பலன்கள் தான் நடைபெறும். ஜெ.ஜெ.அவர்களின் லக்னாதிபதி சூரியன், புதுவருட பிறப்பில் சுக்ரன் சாரம் பெறுகிறார். மேலும் அவர் ஜெ.ஜெ. லக்னத்திற்கு 10ன் அதிபதியாகி மகரத்தில் உள்ளார். புதுவருட லக்னம் மிதுனம். சந்திரன் கடகராசி அதிபதி வாக்காளர்களைக் குறிக்கும். எனவே மக்களின் ஆதரவு எப்போதும் உண்டு. 

தலைநகர லக்னம் மேஷம்,அதிபதி செவ்வாய் சனியுடன் கூடி 8ல் உள்ளார்கள்.ரவுடியிசம்,தீவிரவாதம், கொலை,கொள்ளை, கடுமையாக அடக்கப்படும். 7ம் இடம் நட்பு இங்கு ராகு உள்ளார். இவர் கோதண்டராகு ஆவார். இவர் நல்ல நண்பர்களையும், நல்ல ஆலோசகர்களையும் அறிமுகப்படுத்துவார். புதன் கேட்டை நட்சத்திரம்,அதிதேவதை இந்திரன். இந்திரன் எனமுடியும் பெயருடைய நபர்களால் அனுகூலம் உண்டு.

ஜெ.ஜெ. அவர்கள் தனது ஆட்சியில் இவ்வருடம் முடியும் தருவாயில் எல்லோரும் வியக்கும் வகையில் முன்னேற்றம் காண்பார்கள்.

எல்லாம் வல்ல ஸ்ரீபகவதியின் அருள் 
மக்களுக்கும்,ஆட்சியாளர்களுக்கும் 
கிடைக்கட்டும் என பிரார்த்திக்கும் 

ஜோதிடர் G.V ஷர்மா.சேலம். 
 2011.12.21.

Sunday, December 25, 2011

இந்தியாவிற்கு 2012 வருட பொது பலன் என்ன?

 2012 வருட பொது பலன் 
விஸ்வநாத ஷர்மா.


இந்த பலன்கள் விகடனில் எழுதியுள்ளேன்.

Monday, October 24, 2011

தஞ்சை பெரியகோவிலில் இடி விழுந்த விவகாரம்-ஜோதிட விளக்கம்.

அன்புள்ள ஜோதிட அபிமானிகளுக்கு வணக்கம். (PHR ன் G.V சிஸ்டம்)இன்று மேற்படிதலைப்பை ஜோதிட ரீதியாக ஆராய்ந்தபோது வந்த முடிவுகளைகீழே கொடுத்துள்ளேன்.

தஞ்சைகோவிலில் இடி  விழுந்துவிட்டது. அதனால் ஆட்சி செய்பவர்களுக்கு ஆபத்து என்று பலவாறாக பேசப்படுகிறது. உண்மையில் பெருவுடையார் கோவில் கோபுரத்தில் எந்த சேதமும் இல்லை அதற்கு முன்னால் உள்ள மண்டபத்தில் தான் சேதம் ஏற்ப்பட்டுள்ளது.இதற்கு ஜோதிடரீதியான விளக்கம்.

சம்பவம் நடந்தது 29.09.2011 வியாழன் இரவு 9.10மணியளவில்.அன்றைய கிரகநிலை.இரவு 9.10முதல்-2.30வரை சுவாதி3ம் பாதத்தில் சந்திரன் உள்ளார்.
ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.இவர் கடாரம் வரைசென்று தன் ஆட்சியை விரிவுபடுத்தினார். இவர் மகன் ராஜேந்திரசோழன் குமரி முதல் இமயம் வரை தனது ஆட்சியை நட்த்தினான்.எனவே இக்கோவிலின் தொடர்பு ஆட்சியாளர்களை எப்படி பாதிக்கும் என ஜோதிடரீதியாக சொல்லுகிறேன்.


முதலில் இக்கோவிலுக்கு கருவூரார் சித்தரின் சாபம் உள்ளது. இவரின் எண்ணங்களுக்கு மாறாக கோபுரம் உயர,உயர மன்ன்னின் மனது மாறுபட்டு மன்னனின் விருப்பத்திற்கு ஏற்ப கோவில் உருவாகி கருவூர்சித்தரின் சாபம் ஏற்பட்டுஇருக்கலாம். இதனால் இக்கோவில் மற்ற ஆலயங்களை விட பரிகார ஸ்தலமாக இல்லை. ஆலயம் ஆச்சரியம் கலந்த சுற்றுலா தலமாக உள்ளது.

மேலும் மற்ற அரச பரம்பரை வாரிசுகள் இருப்பதைப்போல் ராஜராஜ சோழன் வாரிசுகள் யாரும் இல்லை. எனவே தான் ஏதாவது காரணம் கொண்டு இக்கோவில் சாபம் பெற்று இருக்கலாம். இதனாலேயே இங்கு நடக்கும் நிகழ்வுகள் அரசாங்கத்தையும், அதை நிர்வகிப்பவர்களையும் பாதிக்கிறது என்பது எனது தாழ்மையான கருத்து.

எனவே ஜோதிடரீதியாக ஆராய்ச்சி செய்யும்போது, நமது தலைநகர் டில்லி. அது மேஷம் ஆகும். கோவிலின் நந்திக்கும் கருவறை விமானத்திற்கும் நடுவில் உள்ள மணிமண்டபம் தான் பாதித்துள்ளது. 

பாதித்த பகுதி மண்டபத்தின் வ.கிழக்கு உச்சியில். மேஷத்திற்கு 5ம் இடம் கோவில் சிம்மராசியை குறிக்கிறது. அதன் அதிபதி சூரியன் அஸ்தம் நட்சத்திரத்தில் உள்ளார்.சூரியன் முதன்மையான கிரகம். அந்த சூரியன் அம்சத்தில் மேஷ ராசியில்.மேஷம் உயர்வான இடத்தை குறிக்கும்.

எனவே ஆட்சியின் உயர் பதவி (அ) அதீத அதிகாரம் உள்ள ஒருவர் பாதிப்புக்கு உள்ளாவார் என்பது அர்த்தம். மேலும் அஸ்தம் பெண் நட்சத்திரம் அதன் அதிதேவதை சூரியன். அஸ்த்த்தின் காரகத்துவங்கள் இரட்டைகுழந்தைகள், தங்கம், நெருக்கடி, விபத்து, நிர்ப்பந்தம், விரல்கள்விரிந்தநிலை, ஆபரேசன், சிறுநீர்பை, அசுவமேதயாகம் இதுபோல பலவுண்டு. மேலும் டில்லியை மையமாக கொண்டு ஆட்சி செய்கின்ற அதிகாரம் காங்.கட்சிக்கு. மேற்படி காரகத்துவத்தில் விரல்கள் விரிந்தநிலைகாரகத்துவம் காங்.கட்சியின் “கைசின்னத்தை குறிக்கிறது.

எனவே அஸ்தம்,சூரியன் என்ற காரகத்துவகாரணமாக இக்கோவில் விஷயம் தமிழக ஆட்சியாளர்களை பாதிக்காது. டெல்லி ஆட்சியாளர்களையும்,அதன் தலைமையையும் மட்டுமே பாதிக்கும்.ஏனென்றால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்றால் இருவருக்கும் பாதிப்பு உண்டாகும் ஆனால் இங்கு அதிமுக தனித்து ஆட்சி செய்வதால் தமிழக சர்க்காருக்கு பிரச்சனை இல்லை.

காளஹஸ்தி கோபுரம் விழுந்தபோது அங்கு ரோசய்யா தலைமையில் காங்.ஆட்சி.ஆதலால் அங்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டு ரோசய்யா பதவி விலகினார். தமிழகத்தில் அவ்வாறு இல்லை.

ஜோதிட ரீதியில் சூரியனை, செவ்வாய்,சனியும் சூட்சம பரிவர்த்தனையில் பார்ப்பதால் வடகிழக்கில் இருந்து ஆபத்து வரும்.இறையாண்மை பாதிக்கும். அம்சத்தில்மேஷத்தில் உள்ள சூரியன்,புதன் இவர்களை செவ்வாய் பார்க்கிறார். (சூரி-வெண்மை, புத-பச்சை, செவ்-சிகப்பு) எனவே காங்.ஆட்சிக்கும்,அதன் தலைமைக்கும் இடையூறு ஏற்படும். 

அது எப்போது எனும்போது ஐப்பசி20(6.11.2011)அல்லது, தை10 (24.01.2012) அல்லது(14.4.2012)ஆகிய காலத்தில் ஏற்படலாம்.
மேஷத்திற்கு 9ம்வீடு ஆட்சியை குறிக்கும் குரு வீடு. அவர் வக்ரகதியில் உள்ளார். எனவே ஆட்சி மாற்றமோ,தலைமை மாற்றமோ ஏற்படும். 

பெரியகோவில் சம்பவங்கள் தமிழகத்தில் பாதித்தபோது எல்லாம் மத்தியில் யார் ஆட்சியில் தொடர்புடன்(கூட்டணி)இருந்தார்களோ அவர்களே பாதிக்கப்பட்டார்கள். தனித்து ஆட்சியில் இருந்தவர்கள் யாரும் பாதிப்புக்கு உள்ளாகவில்லை. 

ஜோதிடர்கள் இனி இச்சம்பவம் பற்றி குழப்பம் வேண்டாம். ஈஸ்வரன் எப்போது தமிழ்நாட்டை காத்துகொண்டுதான் இருக்கிறான்(மத்தியில் கூட்டணி இல்லாத பொழுது).தென்னாடுடைய சிவனே போற்றி என்ற பெரியோர் வாக்கு பொய் ஆகாது.
வாழ்க ஜோதிடம்.                     வளர்க PHR ன் GV சிஸ்டம்.
                         சுபம்.

Monday, October 17, 2011

ஆஞ்சநேயருக்கு வடைமாலை வழிபாடு செய்வது ஏன்.

அன்புள்ள ஜோதிட அபிமானிகளுக்கு வணக்கம். (PHR ன் G.V சிஸ்டம்)இன்று மேற்படிதலைப்பை ஜோதிட ரீதியாக ஆராய்ந்தபோது வந்த முடிவுகளை
கீழே கொடுத்துள்ளேன்.

ஆன்மீகத்தில் நாட்டம் உடையோர், தெய்வீக நம்பிக்கை உடையோர் அனைவரும் தமது காரியம் வெற்றிபெற கடவுளுக்கு தம்மால் முடிந்த காணிக்கை செய்தும் வேண்டிக்கொள்கிறார்கள். அது போலத்தான் மேற்படி ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றுவது என்பதும்.

ஜோதிடத்தில் சுபவேளையில் செய்வதற்கு சுபஹோரை, சுபநட்சத்திரம், சுபதாரை என்று உள்ளது.சுபதாரை என்பது 9 வகையாக பிரிக்கப்படுகிறது.

1.ஜன்மம். 2.ஸம்பத்து. 3.விபத்து. 4.ஷேமம். 5.பிரித்தியரம். 6.ஸாதகம். 7.வதம். 8.மைத்ரம். 9.பரமைத்ரம். இவற்றை ஜோதிடர்கள் பெரும்பாலும் திருமணவிஷயத்தில் மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.இவற்றை எல்லாசமயங்களிலும் பயன்படுத்தி வெற்றிபெறலாம். 

எப்படி? இதோ அதற்கு உதாரணமாக ஆஞ்சநேயருக்கு வடைமாலை வழிபாடு.

ஆஞ்சனேயர்--மூலம் நட்சத்திரம். இதற்கு ஸாதகமான 6வது நட்சத்திரம் சதயம்.

சதயம் :
மிருகம்   - பெண்குதிரை
பட்ஷி     - காகம்
விருட்ஷம் - கடம்பு
அதிதேவதை - யமன்.

மேலும் சதயம் கொத்துக்கொத்தாக காய்க்கும் அனத்துக்கும் பொருந்தும்.

சதயம் நட்சத்திரம் ராகுவின் அம்சம் ராகு உளுந்துக்கு அதிபதி. சதயம் செக்குவையும் குறிக்கும். எண்ணை செக்கில் இருந்து எடுக்கப்படுகிறது.

மேற்காணும் விஷயங்களை சேர்த்துப்பார்த்தால் உண்மை புரியும்.

உளுந்தில் இருந்து மாவு எடுத்து எண்ணையில் போட்டால் வடை. 

வடையைமாலையாக தனக்கு பிடித்த எண்ணிக்கையில் ஆஞ்சனேயருக்கு சார்த்தி வழிபட்டால் தனது பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

சதயம் நட்சத்திர அதிதேவதை யமன் மரணபயம் நீங்கவும், தீர்க்காயுள் பெறவும், தங்கள் வேண்டுதல் நிறைவேறவும்,சாதகமாக அமைய 6வது
தாரையை பயன்படுத்தினால் வெற்றிநிச்சயம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

Thursday, September 8, 2011

மனம் கனிந்த ஓணம் நல்வாழ்த்துக்கள்.

                             
                             அனைவருக்கும் மனம் கனிந்த ஓணம் நல்வாழ்த்துக்கள்.   

Thursday, July 21, 2011

ஜெ.ஜெயலலிதா துணைப்பிரதமர் ஆவாரா?.ஜோதிட ஆய்வு.

அன்புள்ள ஜோதிட அபிமானிகளுக்கு வணக்கம்.

மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் இந்தியாவின் பிரதமராகவோ,அல்லது துணை பிரதமராகவோ வருவார் என அரசியல் உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் அதற்கான அமைப்பு ஜோதிடரீதியில் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு அமையுமா?,என்பதை ஆய்வு செய்வதே இக்கட்டுரை.

 செல்வி ஜெ.ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்றது 2011-05-16.பகல் 12.47மணி.
அன்றைய கிரகநிலை:
PHRன் G.V சிஸ்டத்தில் அம்சகட்ட கிரக நிலைகள் பிரதானம் என்பதை அறிவீர்கள்.

எனவே மிதுன லக்.க்குஜீவனாதிபதி குரு(7.10.11)ஐ குறிக்கிறார். 7,10 க்குடைய குரு, கேதுசாரம் பெற்று 11ல். மேலும் 11ம் அதிபதிசெவ்வாய் கேதுசாரம் பெற்று லக்னத்தில் அமந்துள்ளார். லக்னாதிபதியும் கேதுசாரத்தில் 12ல் உள்ளார்.

மிக முக்கிய இடமான 9ல் சந்திரன் ராகுசாரத்தில் உள்ளார்.அந்தராகுவும்,11ல்குருவுடன் சேர்க்கை. உயர்பதவி எனும் இடம் மேஷம்,அதில்குரு,ராகுவுடன் பலமாக அமர்ந்துள்ளார்.முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் லக்னம் சிம்மம். இதன் அதிபதிசூரியன் கோட்ச்சாரத்தில் மேஷத்திற்கு 10ல் உள்ளார் அதுவும் தனது சுய சாரத்தில் உள்ளதும் விசேஷம். 10ல் பகலவன் எட்டிப்பறிப்பான்.லக்னத்தில் உள்ள 6, 11, க்குடைய செவ்வாய் 8ம் பார்வையாக சூரியனை பார்க்கிறார்.

உலக லக்னம் என்பது மேஷத்தை குறிக்கும்.ஒவ்வொரு நாடு,ஒவ்வொரு மாநிலம் இவைகளின் தலைமையிடம் ராசியில் மேஷத்தை தான் குறிக்கும்.மிதுன லக்னத்திற்கு 11ல் ராகு கேதுவின் சாரத்தில்(மூலம் நட்சத்திரம்)இருப்பதும்,மூலம் ஆஞ்சனேயர் பிறந்த நட்சத்திரம் என்பதால் அதிதபலத்தை 11ம் பாவம் பெறுகிறது.தன் விருப்பம் என்று சொல்லக்கூடிய 5ம் வீட்டில் கேது உள்ளார். கேது துலாத்தில் உள்ளதால் அவர் சுக்கிரனைப்போல் பலனைக் கொடுப்பார். சுக்கிரனும் கேது சாரத்தில் 11ம்வீட்டுக்கு 2ல்(12) லக்னாதிபதி புதனுடன் அமந்துள்ளார்.இந்தியாவின் தலைநகரில் ஆட்சியில் மேஷம் முதல் இடம், ரிஷபம் 2மிடம். எனவே ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு பிரதமராகும் தகுதி தனக்கு உண்டு என எண்ணுபவர்.      

 லக்னத்திற்கு ராஜ்ஜியம்,செயல் என்று சொல்லக்கூடிய 10ம் இடத்திற்கு கூட்டு என்றுச்சொல்லக்கூடிய 7ம்பாவாதிபதி புதன், 1,4க்குடையவராகி மேஷத்திற்கு 2ம் வீட்டில் சுக்கிரனுடன் அமர்வதால் மத்தியில் கூட்டணி ஆட்சி ஏற்பட்டு ஜெ.ஜெயலலிதா அவர்கள் துணைப்பிரதமர் ஆவார் என்பதை கிரக அமைப்பு சொல்கிறது.

எந்த கூட்டணி

5ம் வீட்டு அதிபதி சுக்ரன் ரிஷபத்தில். சுக்ரன் செந்தாமரையில் வாசம் செய்யும் லெஷ்மியைக் குறிக்கும்.எனவே தாமரையை சின்னமாக கொண்ட கட்சியுடன் கூட்டு வைப்பது உயர்பதவியை கொடுக்கும்.
5ல் கேது குருவின் சாரம். தனித்த குரு அந்தவீட்டை கெடுப்பார் என்றாலும், கேதுவை அதன் சார அதிபதியான குரு 11ல் இருந்து 5ம் இடத்தை பார்ப்பதால் இவர் தற்போதைய கூட்டணியுடன் பாராளுமன்ற தேர்தலில் நின்று வெற்றி பெற்று பின்பு தேசிய கட்சியுடன் கூட்டு ஏற்படும்.

மந்திரிசபை என்பது சிம்மராசியைக் குறிக்கும். வாக்காளர் என்பது கடகம்,விருச்சிகம்,கும்பம் ஆகிய ராசிகளை குறிக்கும்.ஜெ.ஜெயலலிதா அவர்களின் லக்னம் சிம்மம். இதன் அதிபதி சூரியன் இவர் ஜாதகத்தில் உச்சம்பெற்றுள்ளார். முதல்வராக பதவி ஏற்றகாலத்திலும் சூரியன் ராசிக்கு 10ல் அமர்ந்துள்ளார். கடகம்,விருச்சிகம்,கும்பம் ஆகிய ராசியின் அதிபர்கள் சந்.செவ்.சனி. இவர்கள் அனைவரும் பதவி ஏற்ற நேரத்தில் 1. 9.ம் வீடுகளை குறிப்பதால் தமிழக மக்களின் விருப்பமும் அம்மா அவர்கள் உதவிப்பிரதமராக வேண்டும் என்பது விருப்பம் ஆகும்.
அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு சுரியனை திசையாக கொண்டு தான் பலன் சொல்லவேண்டும்.அதன்படி அம்மாவுக்கு நடப்புதிசை சூரியன்.நடப்புபுத்தி குரு 8.3.2012 வரை.அதன் பின்பு சனிபுத்தி ஆரம்பம். அதில் சனியின்சுய அந்தரம் 2.5.2012நடைபெறுவதால் சூரியதசை, சனிப்புத்தியில் சனிஅந்தரம் முடிந்து புதன் அந்தரம் ஆரம்பிக்கும்போது மத்திய அரசில் மாற்றம் உண்டாகும்.எப்படி?

இதோ.

சூரியனை லக்னமாக கொண்டால் 6ல் சனிபுக்தி, 6,9ம்வீட்டிற்குடைய புதன், 6ம்வீட்டுக்கு 12லும், 9ம்வீட்டுக்கு 9பதிலும் உள்ளார்.மேலும் சூரியனுக்கு 5ல் புதன் காலமாற்றத்தை ஏற்படுத்துவார் என்பதைகாட்டுகிறது.எனவே 02.05.2012 க்கு பின்பு நாட்டில் பெருத்த மாற்றம் வரும் என்பதை கிரக நிலைகள் காட்டுகின்றன.பொறுத்திருந்து பார்ப்போம். 

வாழ்க P.H.R புகழ்..

வாழ்கவளமுடன். 
G.V.சர்மா.சேலம்.8.