Monday, October 24, 2011

தஞ்சை பெரியகோவிலில் இடி விழுந்த விவகாரம்-ஜோதிட விளக்கம்.

அன்புள்ள ஜோதிட அபிமானிகளுக்கு வணக்கம். (PHR ன் G.V சிஸ்டம்)இன்று மேற்படிதலைப்பை ஜோதிட ரீதியாக ஆராய்ந்தபோது வந்த முடிவுகளைகீழே கொடுத்துள்ளேன்.

தஞ்சைகோவிலில் இடி  விழுந்துவிட்டது. அதனால் ஆட்சி செய்பவர்களுக்கு ஆபத்து என்று பலவாறாக பேசப்படுகிறது. உண்மையில் பெருவுடையார் கோவில் கோபுரத்தில் எந்த சேதமும் இல்லை அதற்கு முன்னால் உள்ள மண்டபத்தில் தான் சேதம் ஏற்ப்பட்டுள்ளது.இதற்கு ஜோதிடரீதியான விளக்கம்.

சம்பவம் நடந்தது 29.09.2011 வியாழன் இரவு 9.10மணியளவில்.அன்றைய கிரகநிலை.இரவு 9.10முதல்-2.30வரை சுவாதி3ம் பாதத்தில் சந்திரன் உள்ளார்.




ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.இவர் கடாரம் வரைசென்று தன் ஆட்சியை விரிவுபடுத்தினார். இவர் மகன் ராஜேந்திரசோழன் குமரி முதல் இமயம் வரை தனது ஆட்சியை நட்த்தினான்.எனவே இக்கோவிலின் தொடர்பு ஆட்சியாளர்களை எப்படி பாதிக்கும் என ஜோதிடரீதியாக சொல்லுகிறேன்.


முதலில் இக்கோவிலுக்கு கருவூரார் சித்தரின் சாபம் உள்ளது. இவரின் எண்ணங்களுக்கு மாறாக கோபுரம் உயர,உயர மன்ன்னின் மனது மாறுபட்டு மன்னனின் விருப்பத்திற்கு ஏற்ப கோவில் உருவாகி கருவூர்சித்தரின் சாபம் ஏற்பட்டுஇருக்கலாம். இதனால் இக்கோவில் மற்ற ஆலயங்களை விட பரிகார ஸ்தலமாக இல்லை. ஆலயம் ஆச்சரியம் கலந்த சுற்றுலா தலமாக உள்ளது.

மேலும் மற்ற அரச பரம்பரை வாரிசுகள் இருப்பதைப்போல் ராஜராஜ சோழன் வாரிசுகள் யாரும் இல்லை. எனவே தான் ஏதாவது காரணம் கொண்டு இக்கோவில் சாபம் பெற்று இருக்கலாம். இதனாலேயே இங்கு நடக்கும் நிகழ்வுகள் அரசாங்கத்தையும், அதை நிர்வகிப்பவர்களையும் பாதிக்கிறது என்பது எனது தாழ்மையான கருத்து.

எனவே ஜோதிடரீதியாக ஆராய்ச்சி செய்யும்போது, நமது தலைநகர் டில்லி. அது மேஷம் ஆகும். கோவிலின் நந்திக்கும் கருவறை விமானத்திற்கும் நடுவில் உள்ள மணிமண்டபம் தான் பாதித்துள்ளது. 

பாதித்த பகுதி மண்டபத்தின் வ.கிழக்கு உச்சியில். மேஷத்திற்கு 5ம் இடம் கோவில் சிம்மராசியை குறிக்கிறது. அதன் அதிபதி சூரியன் அஸ்தம் நட்சத்திரத்தில் உள்ளார்.சூரியன் முதன்மையான கிரகம். அந்த சூரியன் அம்சத்தில் மேஷ ராசியில்.மேஷம் உயர்வான இடத்தை குறிக்கும்.

எனவே ஆட்சியின் உயர் பதவி (அ) அதீத அதிகாரம் உள்ள ஒருவர் பாதிப்புக்கு உள்ளாவார் என்பது அர்த்தம். மேலும் அஸ்தம் பெண் நட்சத்திரம் அதன் அதிதேவதை சூரியன். அஸ்த்த்தின் காரகத்துவங்கள் இரட்டைகுழந்தைகள், தங்கம், நெருக்கடி, விபத்து, நிர்ப்பந்தம், விரல்கள்விரிந்தநிலை, ஆபரேசன், சிறுநீர்பை, அசுவமேதயாகம் இதுபோல பலவுண்டு. மேலும் டில்லியை மையமாக கொண்டு ஆட்சி செய்கின்ற அதிகாரம் காங்.கட்சிக்கு. மேற்படி காரகத்துவத்தில் விரல்கள் விரிந்தநிலைகாரகத்துவம் காங்.கட்சியின் “கைசின்னத்தை குறிக்கிறது.

எனவே அஸ்தம்,சூரியன் என்ற காரகத்துவகாரணமாக இக்கோவில் விஷயம் தமிழக ஆட்சியாளர்களை பாதிக்காது. டெல்லி ஆட்சியாளர்களையும்,அதன் தலைமையையும் மட்டுமே பாதிக்கும்.ஏனென்றால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்றால் இருவருக்கும் பாதிப்பு உண்டாகும் ஆனால் இங்கு அதிமுக தனித்து ஆட்சி செய்வதால் தமிழக சர்க்காருக்கு பிரச்சனை இல்லை.

காளஹஸ்தி கோபுரம் விழுந்தபோது அங்கு ரோசய்யா தலைமையில் காங்.ஆட்சி.ஆதலால் அங்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டு ரோசய்யா பதவி விலகினார். தமிழகத்தில் அவ்வாறு இல்லை.

ஜோதிட ரீதியில் சூரியனை, செவ்வாய்,சனியும் சூட்சம பரிவர்த்தனையில் பார்ப்பதால் வடகிழக்கில் இருந்து ஆபத்து வரும்.இறையாண்மை பாதிக்கும். அம்சத்தில்மேஷத்தில் உள்ள சூரியன்,புதன் இவர்களை செவ்வாய் பார்க்கிறார். (சூரி-வெண்மை, புத-பச்சை, செவ்-சிகப்பு) எனவே காங்.ஆட்சிக்கும்,அதன் தலைமைக்கும் இடையூறு ஏற்படும். 

அது எப்போது எனும்போது ஐப்பசி20(6.11.2011)அல்லது, தை10 (24.01.2012) அல்லது(14.4.2012)ஆகிய காலத்தில் ஏற்படலாம்.
மேஷத்திற்கு 9ம்வீடு ஆட்சியை குறிக்கும் குரு வீடு. அவர் வக்ரகதியில் உள்ளார். எனவே ஆட்சி மாற்றமோ,தலைமை மாற்றமோ ஏற்படும். 

பெரியகோவில் சம்பவங்கள் தமிழகத்தில் பாதித்தபோது எல்லாம் மத்தியில் யார் ஆட்சியில் தொடர்புடன்(கூட்டணி)இருந்தார்களோ அவர்களே பாதிக்கப்பட்டார்கள். தனித்து ஆட்சியில் இருந்தவர்கள் யாரும் பாதிப்புக்கு உள்ளாகவில்லை. 

ஜோதிடர்கள் இனி இச்சம்பவம் பற்றி குழப்பம் வேண்டாம். ஈஸ்வரன் எப்போது தமிழ்நாட்டை காத்துகொண்டுதான் இருக்கிறான்(மத்தியில் கூட்டணி இல்லாத பொழுது).தென்னாடுடைய சிவனே போற்றி என்ற பெரியோர் வாக்கு பொய் ஆகாது.
வாழ்க ஜோதிடம்.                     வளர்க PHR ன் GV சிஸ்டம்.
                         சுபம்.

2 comments:

சுதீப் said...

ஐயா,

வணக்கம். நான் ஒரு தனியார் பள்ளியில் கணக்கு வாத்தியாராக பணியாற்றி வருகிறேன். நான் தங்களிடம் ஜோதிடம் கற்க விரும்புகிறேன். நான் தங்களிடம் இந்த இணையதளத்தில் குடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பரின் மூலம் பலமுறை தொடர்பு கொள்ள முயன்று தோற்றுவிட்டேன். ஆதலால் தாங்கள் அஞ்சல் வழியில் பயிற்சி ஏதேனும் நடத்துவதாக இருந்தால் தயவு செய்து எனக்கு பயிற்சிக் கட்டண விபரத்தை மின்னஞ்சலில் bmsudeep@gmail.com தெரிவித்துதவுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.
பா.சுதீப்
திருநெல்வேலி

சுதீப் said...

ஐயா!

ஆனாலும் ஒங்களுக்கு இவ்வளவு தலக்கனம் இருக்கக்கூடாது. இதெல்லாம் ரொம்ப ஓவர் பாஸ். நானும் பீஸ் எவ்வளவு? பீஸ் எவ்வளவுன்னு ஓயாமல் கேட்டு அலுத்துப் போனதுதான் மிச்சம். மனசுல பெரிய லார்டுன்னு நெனச்சி சுத்த விட்டுக்கிட்டு இருக்குறீங்க. சரி. பரவால்ல. எனக்கு மன உளைச்சலை கொடுத்தமைக்கு நன்றி. ஆனால் இதே மன உளைச்சலை நீங்களும் அடைய வேண்டும் என்று இறைவனை மன்றாடிக்கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

Post a Comment