Wednesday, August 11, 2010

ஜோதிடம் என்பது ஜோதிடத்தில் இல்லை


வணக்கம் ஜோதிட அன்பர்களே,எமது PHR in GV System (எளிய  முறை பிரசன்னம் )மூலம் இனி தொடர்ந்து ஜோதிட ஆராய்ச்சி கட்டுரைகள் பதிவிடுகிறேன் படித்து உங்கள் கருத்துக்களை எழுதவும் .
நண்பர் ஒருவர் ஒருநாள் மாலை போன் செய்து நான் இப்பொழுது எங்கு போய் கொண்டு இருக்கிறேன் என கேட்டார்.  என் பதில்: கண்கண்ணாடி வாங்க சேலம் 2 வது   அக்ரஹாரம் செல்கிறீர்கள் என பதில் சொன்னதும் அசந்துவிட்டார்.
எந்த விதமான லக்கின  குறிப்பும் இல்லாமல் எப்படி சொல்லப்பட்டது எனில் அவர் கேட்டது 25 06 2009 .  6 . 32 PM எப்படி சொல்லப்பட்டது எனில் மணியை லக்கினமாக கொண்டும் நிமிசத்தை அம்சா லக்கினமாக  கொள்ளவேண்டும் . 32என்பது மேஷம் முதல் கன்னி முடிந்து துலாஇலக்கினமாகிறது . 32நிமிசத்தை பாதியாக பிரித்தால் 16  டிகிரியில் லக்கினம் விழுவதாக கொள்ள வேண்டும். துலாதுக்கு 3 வீடு குரு. PHR in GV  படி குருவின் சூட்சமம் சுக்கிரன் சுக்கிரனின் அதி சூட்சமம் சந்திரன் சந்திரன் நட்சத்திரம் ரோஹிணி இது கண் கண்ணாடியை குறிக்கும்.  
குரு அவிட்டம் 3 இல் குருவின் சூட்சமமாக இருப்பதால் பூரட்டாதி வீதிகளை குறிப்படும். குருவானதால் பிராமணர்களை குறிப்பதால் அக்ரஹாரம் என எடுத்து, அன்று குரு வக்கிரம் கண்ட நட்சத்திர சூட்சுமம் விழுவதால் 16 இல் ஒரு பங்கு குருஎன்ப தால்  8 இல் ஒரு பகுதி யை  குறிக்கும் என்பதால் இரண்டாவது அக்ரஹாரம்.
உடனே கடையின் பெயர் சொல்ல முடியுமா என்றார் . குரு தங்கத்திற்கு உரியது எனவே தங்கம் பெயரில் கடை இருக்கும் என்றேன்  அவர் கோல்டன் ஆப்டிகல் என்றார். துலா லக்கினத்துக்கு 9 இல் சூரியன் ராகு சாரத்தில் உள்ளதால் கடையின் முதலாளி முஸ்லிம் என்று மேலும் சொன்னதும் அவர் அசந்துவிட்டார்.
படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

5 comments:

Anonymous said...

ஐயா

கிருஷ்ணமூர்த்தி பத்ததி முறையில் ஏற்கனவே இதை கண்டறிந்தேன். அதை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்ப நினைத்தேன். ஒரு பக்கம் பயம். ஏனெனில், நான் ஒரு மாணவன் அவ்வளவே. கைதேர்ந்த ஜோதிடன் அல்ல. மேலும் ஜோதிடம் என் தொழிலும் அல்ல. "................பண்டையகாலத்தில் அரசர்கள்தன் எதிரிகளை வெற்றி கொள்ள பின்வரும் முறையை தான் மிகவும் ரகசியமாக கையாண்டார்கள்.இம்முறையில்தான் தற்சமயம் அம்மா அவர்கள் தமிழக முதல்வர் ஆவதற்குண்டான சாத்தியகூறுகளை கண்டறிந்துள்ளேன்...................." என்று கூறியுள்ளீர்கள். அந்த ரகசிய முறைக்கு என்ன பெயர் என்றும் தெரியப்படுத்தாமல் நீங்களே ரகசியமாக வைத்துள்ளீர்கள்.

Anonymous said...

ஐயா,

தாங்கள் கூறிய அதே அரசர்கால ஜோதிடர்கள் கூறிய குறிப்புக்களை பத்திரப்படுத்தி பொக்கிஷமாக வைத்திருக்கிறேன். மூன்று நகல் செட்டாக வைத்திருக்கிறேன். அத்தனையும் மொழிபெயர்க்கப்பட்டது.

ஈகரை சிவா said...

சும்மா தமாசு பண்ணாதீங்க. இந்த மாதிரி நல்ல ஜோக்குகளை தொடர்ந்து தங்களிடமிருந்து ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

Anonymous said...

ஐயா வணக்கம்
விசித்திர ஜோதிடம் தானே இது?
அதை தாங்கள் மெருகேற்றி வேறு பெயர் இட்டுள்ளீரோ.
எப்படியோ நல்ல ஆராய்ச்சிகளே தற்போது ஜோதிடத்தில்
தேவை.வளர்க உமது பாணி பணி.

0 said...

ஐயா,

தங்களது ஜோதிட முறை நன்றாக உள்ளது. பொதுவாக ஜோதிடர்கள் தங்களது அனுபவக் கட்டுரைகளை வெளியிடும் பொழுது ராசிக்கட்டங்களை (அல்லது குறைந்த பட்சம் பாத சாரங்களையாவது) வெளியிட்டு விளக்கி காட்ட மாட்டார்கள். காரணம் மற்றவர்கள் நோண்டி கண்டுபிடித்துவிடுவார்கள். அதுபோக "யான் பெற்ற இன்பம் பெருக யான் மட்டுமே" என்ற நல்ல எண்ணம்தான். இது சோதிடர்களிடையே உள்ள பொதுவான குணம்தான் ஆனாலும் விதிவிலக்காக சிலர் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருக்கத்தான் செய்கிறார்கள்.

இருப்பினும் நீங்கள் எந்த வகை என்று புரியவில்லை. நீங்கள் சொல்லும் சூட்சுமம், அதிசூட்சுமம் எப்படி கணிப்பது? கே.ப்பி முறையில் கணித்து பார்த்தேன் சரியா வரவில்லை. நவாம்சம், நவாம்சாம்சம், மற்றும் கிரக உராய்வுகள், செயல்ஸ்தானம்..... என்று ஆராய்ந்து ஆராய்ந்து மண்டை குழம்பியதுதான் மிச்சம். பொதுவாக எனக்கு உள்ளுணர்வு இயற்கையாகவே உண்டு. ஆனால் இந்த விஷயத்தில் எனக்கு வேலை செய்ய வில்லை. தயவு செய்து கணித முறையை விளக்குங்கள். ப்ளீஸ். நீங்களும் விளக்கவில்லைஎன்றால் உங்களுடைய பேவரிட் கடவுளான பகவதி அம்மனை வேண்டிப் பெற வேண்டியதுதான். வேற வழி?என்னுடைய அனுபவங்களில் ஒன்று:

ஒரு நபர் கோவில்பட்டியில் இருந்து வந்தவர் வர்ற வழியில் அவருடைய கத்திரிக்கோல் ஒன்றை சானை பிடித்துக் கொண்டு பஸ் ஏறி எண்ணி வந்த பிறகு தற்செயலாக என் கண்ணில் படுவது போல் காட்டினார். நான் உடனே (உங்களைப் போல்தான்) அந்த நிமிடமே மணியை நோட் பண்ணி பாத சாரங்களைப் பார்த்தேன். கத்திரிக்கோல் பிறந்த நட்சத்திரம் பூரட்டாதி. பூரட்டாதின்னா பேங்க். சூரியன் வெப்பத்தை சாணைக்கல்லில் விஸ்வகர்மா வெப்பத்தை குறைத்ததால் விஸ்வகர்மா நட்சத்திரம் சித்திரை.

சித்திரைன்னா வயல். அதாவது வந்தவர் வயல் ஒன்றை பேங்க்ல அடகு வச்சி லோன் வாங்கும் விஷயத்தை சொன்னேன் பார்ட்டியோட மூச்சு நின்னு போகாததுதான் மிச்சம். மற்றபடி பேயறஞ்ச மாதிரி ஷாக்காய்ட்டார்.

பிறகு அவரை கூல் பண்ணி உங்களுக்கு மாசி மாசம் கடைசி வாரம் அதாவது மார்ச் செகண்ட் வீக்ல சூரியன் பூரட்டாதில வர்ற நேரம் லோன் கிடைக்கும்ன்னு சொன்னேன். அவரிடம் இருந்து ஒரு விஷயத்தையும் கேட்காமலையே நானாகவே இவ்வளத்தையும் ஒரு நிமிடத்தில் சொல்லி அசத்தினேன். இப்பேற்பட்ட எனக்கு உங்களுடைய முறை விளங்க மாட்டேன்கிறது.

அதற்காக என்னை உயர்த்தி சொல்லவில்லை.

அடியேனும் காளி அம்மனின் தீவிர மந்திர ஜெபம் செய்பவன்தான். எனக்கு கிடைத்த ஞானம் எல்லாம் காளி அம்மனுக்கு மட்டுமே சொந்தம். அவள் எனக்களித்த பிச்சையில்தான் நான் ஜோதிடம் சொல்லி வருகின்றேன்


நன்றி. நன்றி. நன்றி.
jothidarathna@gmail.com

Post a Comment