Tuesday, August 10, 2010

ஸ்ரீ உபாசனை தெய்வம் அறிவது எப்படி?

 ஜோதிட மாணவர்கள் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக எனது குருநாதர்.திருP.H.R –இன் ஆசியுடன் எம்முடைய G.V system தின் படி எப்படி மிக எளிமையாக, தங்களது குலதெய்வம், இஷ்ட தெய்வம், உபாசனை தெய்வம் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை  இக் கட்டுரையின் வாயிலாக எடுத்துரைக்கிறேன்
உதாரணம்: திரு. K.S.K. (K.P. System) அவர்களுக்கு உபாசனை தெய்வமாக ஸ்ரீ உச்சிஷ்ட மஹாகணபதியை சத்குரு ஸ்ரீ ஸ்ரீ காஞ்சி மகான் அவர்களால் கிடைக்கபெற்று அதன் மூலம் அவர் பெரிய ரகசியத்தை ஜோதிட பிரசன்னத்தில் கண்டு கொண்டார். KSK அவர்கள் பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து உண்மையை விஞ்ஞான ரீதியாக சொல்ல வைத்த பெருமை அவருடைய உபாசனை தெய்வமே காரணமாகும். ஆனால் அவர்களுடைய மாணவர்கள் எல்லோரும் தங்களுடைய கட்டுரை ஆகட்டும், ஜோதிடம் சொல்வதாகட்டும், எல்லா வற்றில்லும் திரு K.S.K. அவர்களின் உபாசனை தெய்வமாகிய ஸ்ரீ உச்சிஷ்ட மஹா கணபதியே நமஹா என்று தான் எழுதுகிறார்கள்.
இவர்கள் அனைவர்க்கும் எம்முடைய தாழ்மையான கருத்து என்னவெனில் திரு K.S.K அவர்களுக்கு ஸ்ரீ காஞ்சி மகான் உபதேசம் செய்தது போல் உங்களுக்கும் உபதேசம் கிடைத்திருந்தால் நீங்களும் அவ்வாறு போட்டுகொள்ளலாம். அப்பொழுது ஜோதிடம் சொன்னால் பலிக்கும். எனவே K.P. மாணவர்கள் தங்களை திருத்தி கொண்டு திரு K.S.K. நமஹா என்று போட்டுக்கொள்ளவும். அது தான் சரியான முறை. உதாரணமாக திரு K.S.K. அவர்களின் ஜாதகம் மூலம் அவருடைய உபாசனை தெய்வம் அவருக்கு எப்படி காஞ்சி மகான் கொடுத்திருப்பார் என்பதை எம்முடைய P.H.R – இன் G.V. system மூலம் கிழே கொடுத்துள்ளேன். இது K.P.மாணவர்கள் அனைவர்க்கும் பயனளிக்கும்
திரு K.S.K. ஜனனம் 01/11/1908, 12:11PM திருவையாறு, தஞ்சாவூர்..
 கிரகம்                ராசி               அம்சம்
லக்னம் ;         மகரம்                 மிதுனம் 
சூரியன்           துலாம்                தனுசு   
சந்திரன்          மகரம்                  மேஷம்
செவ்வாய்     கன்னி                   கடகம்        
புதன்               துலாம்                  தனுசு          
குரு                  சிம்மம்                 கன்னி 
சுக்கிரன்          கன்னி                 கும்பம்       
சனி                   மீனம்                   துலாம்         
ராகு                  மிதுனம்              விருசிகம்  
கேது                தனுசு                    ரிசபம்  


சந்திரன் திசை இருப்பு 8Y, 7M, 6D.
ராசி : மகரம்.
நட்சத்திரம்: திருவோணம், லக்னம்: மகரம்/மிதுனம்[அ]
சிறு குறிப்பு: அஷ்வினி, மகம், மூலம், மூன்றும் கேதுவின் நட்சத்திரங்கள்.
அஷ்வினி குதிரையை குறிக்கும், மகம் எனபது தேர். மூலம் எனபது விநாயகர்.
பரணி: ஆலய தீர்த்தம்.
பூரம்: மழை நீர், கிணத்து நீர்.
பூராடம்: கழிவு நீர், எச்சில், இவைகளை குறிக்கும்.
P.H.R. – இன் G.V. system – இல், உபாசனை மூர்த்தியை சந்திரனை கொண்டு காண வேண்டும். இங்கு சந்திரனின் சூட்சமம் சனி ஆகிறார். சனி தன் சுய சாரத்தில் கேதுவின் சூச்சமத்தில் உள்ளார். கேது மூலத்தில் உள்ளார். மூலம் எனபது விநாயகரை குறிக்கும். கேது அமர்ந்த வீடு குரு வீடு.
குரு: யானை, அரச மரம், பூனை, ஆச்சாரியார் இவைகளுக்கு காரகர். மேலும் உருவத்தில் பெரியதை மஹா என்றும் சொல்லுவதுண்டு. கேதுவின் சுச்சமம் சுக்ரன் ஆகிறார். சுகரனுக்கு உண்டான பூராட நட்சத்திரம் தனுசில் இருபதாலும் கேது, நெளிவு பாம்பு போன்ற உருவத்தை குறிப்பதால் இங்கு பாம்பு போல் நீண்டு உள்ள யானையின் துதிக்கையை குறிக்கிறார்.
பூராடம் எனபது எச்சிலை குறிக்கும். துதிக்கை வழியாக வரும் நீர் எனபது பூராடத்தை குறிக்கும். (எச்சில் எனபது சமஸ்க்ரிதத்தில் உஜ்ஜிஸ்டம் என்று பெயர்). எனவே மூலம் விநாயகர் ஆவதால் அந்த மூர்த்தியை ஸ்ரீ உஜ்ஜிஸ்ட மஹா கணபதியை அவருக்கு உபாசனை மூர்த்தியாக கிடைத்தது. அந்த மூர்த்தியின் உருவம் ஒரு பெண்ணை தன் இடது தொடையில் அமர வைத்து தன் கையை அப்பெண்ணின் இடது மார்பை பிடித்து கொண்டும் தன் துதிக்கையை பெண்ணின் யோனியில் வைத்திருப்பார். இவ்வளவு எளிமையான P.H.R –இன் G.V.system மூலமே சொல்லமுடியும்.
வாழ்க பிரசன்னம்!!! வாழ்க குருநாதர் P.H.R புகழ்!!!
சுபம்!!!

No comments:

Post a Comment