Thursday, December 30, 2010

ஜெ.ஜெயலலிதாவின் உண்மையான ஜாதகம். மீண்டும் ஆட்சியை பிடிப்பார்.


ஸ்ரீ பகவதி அம்மா அவர்களுக்கு


எனது அருமை இனிய ஜோதிட மாணவர்களுக்கு PHR ன் ஜி.வி சிஸ்டம்(கோ.விஸ்வநாத சர்மா) மூலம் இனியபுத்தாண்டு வாழ்த்துக்களையும்ஆசிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.இன்றைய தமிழ்நாட்டில்மற்றும் டெல்லிவரையிலும்ஆட்சிசெய்கின்றஅரசியல்அமைப்புகளைஎல்லாம்வல்லஸ்ரீபகவதிஆசிர்வதிக்கட்டும்.
தமிழ்நாட்டின் வருங்கால முதல்வர் யார் என அறியநமது அ.இ.அ.தி.மு.க.பொதுசெயலாளர் ஜெ.ஜெயலலிதா அம்மா அவர்களின் ஜாதகம் கொண்டு ஆராய்ச்சி செய்து இந்த கட்டுரையை சமர்ப்பித்துள்ளேன்.எனது குருநாதர் திரு.PHRஅவர்கள் என்னிடம் வழங்கிய ஜாதகத்தைக்கொண்டு ஆய்வு செய்து கிடைத்த பலன்களை சமர்ப்பிக்கிறேன்.

பிறந்த நாள்: 1946.05.09ம் நாள் விய வருடம் சித்திரை மாதம் 
27ம் தேதி பிற்பகல் 12.56க்கு பெங்களூருவில் ஜனனம்.


சூ புத
சுக் ராகு
சனி மா

கே
புத
ல மா
சந் சுக் சனி

ராசி
செவ்

நவாம்சம்


ல சந்

குரு (வ)

கே

குரு (வ)

சூ செவ்

ராகு

கேது தசை இருப்பு..2வ..7மா..8நாள்.
PHR  ஜீ.வி.சிஸ்ட்த்தில் சந்திரனால் கணிக்கப்படும் உடல் திசை நம்மை
போன்றவர்களுக்கு தான் பயன்படுத்தி பலன் சொல்லவேண்டும். ஆனால் அரசியல்வாதிகளுக்கு இதை வைத்து பலன் சொல்லக்கூடாது. பண்டையகாலத்தில் அரசர்கள்தன் எதிரிகளை வெற்றி கொள்ள பின்வரும் முறையை தான் மிகவும் ரகசியமாக கையாண்டார்கள்.இம்முறையில்தான் தற்சமயம் அம்மா அவர்கள் தமிழக முதல்வர் ஆவதற்குண்டான சாத்தியகூறுகளை கண்டறிந்துள்ளேன்.

எப்படி?

அரசியல் சம்பந்தப்பட்டவர்களுக்கு உயிர்திசை  சூரியனைக்கொண்டு கணிக்கப்படவேண்டும்.இவர் ஜாதகத்தில் சூரியன்,பரணி 4ல் உள்ளார்.இது சுக்கிரதிசையாக கொள்ளவேண்டும். சுக்.இருப்பு 2வ.4மா.26நா. தற்போது சனிதசையில் புதன்புத்தி 2011.06.24வரை உள்ளது. ஜாதகத்தில் சனி,புதன் ஆகிய இருகிரகமும் வர்க உத்தமத்தில் உள்ளனர். புதனும்,கேதுவும் சூட்சம நட்சத்திர பரிவர்த்தனை.  ராசியில் 3,10க்கு உடைய சுக்கிரன், 5,8க்குடைய குருசாரம்பெற்று சனியோடு 11ல் உள்ளார்.(அம்சத்தில்) அதாவது 5க்கு நிவர்த்திஸ்தானத்திலும்,8க்கு4ம் இடத்திலும் இருப்பது மிகவும் சிறப்பு. 6,7க்குடைய சனி 11ல் இருப்பதால்(7மிடம் கூட்டு) தன் எண்ணம் போல் செயல்படுத்துவார்.ஜி.வி. சிஸ்ட்த்தில் திசாநாதன் இருக்குமிடம் லக்கினம்.இங்கு லக்னாதிபதி 4ம்வீட்டு அதிபதிகுடைய புதன்11ல்,மேலும் அந்த புதன் கேதுசாரம். கேதுவானவர் புதன்சாரம் பெற்று10ல் உள்ளார்.11ல் உள்ள புதன் குருவின் பார்வையில் இருக்கிறார். 9,10,11ம்இடங்கள் அரசியலுக்கு மிகவும் முக்கியம். லக்னாதிபதி 10,11குறிப்பதாலும்,அஸ்வணி நட்சத்திரத்திலும் உள்ளார்.

அஸ்வினி காரகத்துவம்.
1.உயர்வான இடம்
2.மலை உச்சி
3.தலைநகர்
4.கிரீடம். இதைப்போன்று பலகாரகத்துவம் உண்டு.

 சனி புனர்பூசத்தில் உள்ளது. ராமர் பிறந்த இந்த நட்சத்திரமானது பட்டாபிஷேகம்,ஆட்சி,சிம்மாசனம்,இளவரசன்,இளவரசி,சக்தி வாய்ந்த பலம்,மந்திரசக்தி,இரட்டைஆட்சி,அழியாதன்மை இவற்றை புனர்பூசம் குறிக்கும்.

தற்சமயம் சனிதசை பூசம் நட்சத்திரத்திலிருந்து நடைபெறுகிறது. பூசம் குருபகவான் பிறந்த நட்சத்திரம். லக்னாதிபதிபுதனை குரு பார்ப்பதால் தன்னுடைய எண்ணம் போல் நடக்கும்.அதனால் இம்முறை கண்டிப்பாக அம்மா ஆட்சியை பிடிப்பார்.

சென்றமுறை உயிர்திசை பூசம்1ல் இருந்து திசை நடந்த்து. அப்போது 10ல் ராகு,சுக்கிரனுடன் இருந்தார். ராகுவின் சாரம் மிருகசீரிடம். இதன் அதிதேவதை சந்திரன். குருபார்வை,எனவே சந்திரன்சாபம் பெற்றுவிட்டார்.அதனால்ராஜ்ஜியம் கிடைக்கவில்லை. ஆனால் இப்போது பூசம்4ல் இருந்து உயிர்திசை நடைபெறுகிறது. விருச்சிகத்திற்கு10ல் சந்திரன்கேது சாரம்.அதாவது மகம். மகத்தின் அதிதேவதை சுக்கிரன். சுக்கிரன்,சனியுடன் அம்சத்தில் உள்ளார்.புதன் கேதுசாரத்தில் உள்ளதால் ராஜாங்கம் என்ற கிரீடம் ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு அமையும்படி உள்ளதால் கீழ்காணும் பரிகாரத்தை அவசியம் செய்யவேண்டும்.

புதன் மேஷத்தில் கேது சாரம்.
1. மேஷம்மலையும்-மலையைச்சார்ந்த இடம்.
2. புதன் மகாவிஷ்ணுவின் அம்சம்.
3. கேது கொடிமரத்தைக்குறிக்கும்.

சூரியன் சுக்கிரன்சாரத்தில்
1. சுக்கிரன் செந்தாமரையை குறிக்கும்.
2. செந்தாமரை அதில் வாசம் செய்யும் லட்சுமியை குறிக்கும்.
3. மேஷம்  செவ்வாய் வீடு
4. செவ்வாய் பூமி காரகர்.

        செவ்வாய் கடகத்தில் உள்ளார் சூட்சமம் சுக்கிரன் ஆகிறார். எனவே மலைச்சார்ந்த பகுதியில் ஸ்ரீதேவி,பூதேவி சமேதரராய் உள்ள விஷ்ணு ஆலயதிற்கு கொடிமரம் வைத்தால் தங்கள்புகழ் ஜெகம் முழுதும் பரவ கொற்றவன் கொடியேற்றுவார் என்பதில் ஐயமில்லை.

அம்பிகையை ஆயிரம் நாமங்களில் வழிபடுவதே லலிதாசகஸ்ரநாம்ம். லலிதா என்றால் லட்சுமி,சரஸ்வதி,துர்க்கா ஆகும்.. இவற்றையே நான் ஜோதிட ரீதியில் நான் எழுத்தில் ஆய்வு செய்துள்ளேன்.


பெயர்.     நட்சத்திரம்.   அதிதேவதை
ஜெ   -      திருவோணம்  -     மகாவிஷ்ணு
     -     கேட்டை       -      இந்திரன்
     -     அஸ்விணி     -      சரஸ்வதி
லி     -     பரணி         -       துர்க்கை
தா         சுவாதி         -      லட்சுமி


அசுரர்களை வதம் செய்ய அம்பிகை வந்தாள் என்பது புராணம். இங்கு மேலே குறிப்பிட்டுள்ளபடி பார்க்கும்போது மக்களை காக்க தேவியின் அம்சமும்,பூர்வஜென்ம பலன் உள்ளவர்களுக்குத்தான் இந்த அமைப்பு கிடைக்கும்.பொதுவாக நம் நாட்டில் பெண்களை தெய்வாம்சமாக பார்ப்பதுண்டு. கேரளாவில் உள்ள சக்குளத்து பகவதி கோவிலில் பெண்களுக்கு சன்னிதானத்தில் நம்பூதிரிகளால் பாதபூஜை செய்வது வழக்கம்.அதனால் தான் கட்டுரையின் ஆரம்பத்தில் ஸ்ரீபகவதி அம்மா என்று குறிப்பிட்டுள்ளேன். எனவே ஜாதகத்தில் பூர்வஜென்மத்தில் செய்த நன்மை,தற்சமயம் பலனை கொடுக்க்கூடிய வகையில் திசைகள் நடக்க உள்ளது என்பதையும்,சரஸ்வதி,துர்க்கை,லட்சுமி மூவரின் கூட்டும் ஸ்ரீபகவதி என்று அழைக்கபடுவதாலும்,  ”  என்ற எழுத்து கேட்டை நட்சத்திரத்தை குறிப்பதால் அது கோட்டையை நிச்சயம் பிடிக்கும்.இதன் அதிதேவதை இந்திரன். இந்திரன் கையில் உள்ளது வஜ்ஜிராயுதம். அது எதிரிகளை வெல்லக்கூடியது. எனவே இம்முறை ஆட்சியில் அமர்ந்து தமிழகத்தை வஜ்ஜிராயுதம் போன்ற கோட்டையாக மாற்றி நாட்டை நல்வழிப்படுத்துவார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
                      
ஜோதிடர். கோ.விஸ்வநாத் சர்மா. 
30.12.2010... சேலம்.636008

10 comments:

Anonymous said...

நீங்க ஒருத்தர்தான் நடக்க இருக்றத பொட்டில் அடிச்ச மாதிரி சொல்லிருக்கிறீங்க. ஒங்களோட தெறமைக்கு என்னோட வாழ்த்துக்கள். எதுக்கு சொல்றேன்னா மத்தவங்கல்லாம் ரோட்டுல செத்துக்கெடக்குற பாம்ப பாத்து நான் அப்பவே சொன்னேன்லா இது சாவும்னு, என்று போவோர் வருவோரெல்லாம் தான் சொன்னது நடந்தது என்று பீலா விட்டுக்கொண்டிருக்கும் காலமிது. சிலர் இன்னும் ஒருபடி மேல போயி நான் சொன்னதுனாலதான் செத்தது என்றும் அள்ளிவிட தயங்க மாட்டேன்கிறார்கள். நிலைமை இப்படி இருக்க நீங்களோ ஒப்பெனா சொல்லிருக்கிறீங்க. பாராட்டுக்கள். ஒரு பக்கம் வெளம்பரம்நு எடுத்துக்கிட்டாலும், மறுபக்கம் உங்கள் கணிப்பு பாராட்டத்தகுந்தது. நல்லா தீர்க்கமா ஆராய்ஞ்சிதான் சொல்லிருப்பீங்க. நானும் என்னோட ஆருடத்துல அதாவது கிருஷ்ண மூர்த்தி பத்ததி முறையில் அலசியதில் இதே வெடதான் கெடச்சது. ஒருவேளை நம்ம கணிப்பு மிஸ் ஆயட்டுன்னு வைங்க, நம்ம தப்பா டேன்ஸ் ஆடிரும்.

Anonymous said...

ஐயா,
நீங்கள் ஏன் பண்டைய காலத்துல அரசர்கள் ரகசியமா பாத்த ஜோஷியத்துக்கு போறீங்க. அந்த காலத்துல உள்ளது இப்ப நடைமுறைக்கு ஒத்து வராதுங்கோ. சித்தர்களும் ஏனைய வகையிலான அறிவு ஜீவிகளான நமது முன்னோர்கள் தங்களுடைய நீண்ட தீர்க்கமான உள்ளுணர்வு காட்சியினால் உண்டான தீர்க்க தரிசனத்தால் தாங்கள் கண்டவற்றை பதிவுசெய்து பிற்கால சந்ததியினரான நமக்கு பயன்படும்படி செய்திருக்கிறார்கள். அவற்றை நீண்ட கால ஆராய்ச்சிக்குப்பின்னர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் அக்குவேறாக அலசி புதிய முறையைக் கையாண்டு பல்வேறு பதக்கங்களையும் பட்டங்களையும் பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறார் (தன்னுடைய ஆராய்ச்சிக்காக). அப்பேற்பட்ட அந்த மாமனிதரின் மகன்கள் சுப்பிரமணியம் என்பவர் சென்னையில் மைலாப்பூரில் வசிக்கிறார். அவரிடம் கேட்டாலே புட்டுப்புட்டு வைப்பார்.

Anonymous said...

நீங்க விளக்கியிருக்கும் விதம் அருமையாக உள்ளது. நானும் இதை கிருஷ்ணமூர்த்தி பத்ததி முறையில் ஏற்கனவே சோதனை செய்து பார்த்தேன். என்னுடைய பிரசன்னா ஆருடத்திலும் இதே விடைதான் கிடைத்தது என்பதை தங்களுடன் சேர்ந்து பெருமைப்படுகிறேன். நான் உபயோகித்தது கே.பி முறை என்றழைக்கப்படும் கிருஷ்ணமூர்த்தி பத்ததி முறை ஆகும்.

Anonymous said...

கிருஷ்ணமூர்த்தி பத்ததி என்பவர் விமானத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது இத்தனை மணி இத்தனை நிமிடத்திற்கு தரையிறங்கும் என்றெல்லாம் கூறி அசத்தியிருக்கிறார். மேலும் பல நிகழ்வுகளை முன்கூட்டியே கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார். அவரின் ஆருடங்களைக்கேட்ட பலர் "இவர் ஏதோ எட்சனி தேவதையை வசியப்படுத்திக் கூறுகிறார்" என்றெல்லாம் நம்ப மறுத்தனர். ஆனால் கிருஷ்ணமூர்த்தி அவர்களோ தகுந்த ஆதாரங்களுடன் விளக்கி கூறிய பின்னரே ஏற்றுக்கொண்டனர். நம்மாள்க்கதான் எதையும் சாமான்யமா ஒத்துக்க மாட்டாங்களே.

Anonymous said...

மேலும் விபரங்களுக்கு http://www.jothidarathna.blogspot.com/

ஈகரை சிவா said...

இப்படியே ஊரை ஏமாத்திட்டு அலைங்க.

ஜோசப் said...

@ ஈகரை சிவா---------------

கண்ணா ஒன்ன மாதிரி நாத்திகன் மாதிரி வேஷம் போட்டுட்டு, நைசா யாருக்கும் தெரியாம முக்காடு போட்டுட்டு கோயிலுக்கு போறவன எல்லாம் பாத்திருக்கேன் மச்சி. ப்ளீஸ் சட் யுவர்..........

ஆடிட்டர் சரவணன் said...

தல, நம்மாளு சொல்றதையும் கேளுங்க. இங்கன கொஞ்சம் எட்டி பாத்துட்டு போங்க.

http://anubavajothidam.com/%E0%AE%9C%E0%AF%86-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D/#comments

ஆடிட்டர் சரவணன் said...

நண்பர்களே, ஒங்களுக்கு யார் தேர்தலில் தோற்பார்கள், யார் ஜெயிப்பார்கள் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ள விருப்பமெனில் நம்ம தலைட்ட கேளுங்க. நான் தலைக்கு மார்கெட்டிங் பார்ட்டி இல்லீங்க. நான் எந்த ஜோசியக்காரனையும் சாதாரணமா நம்ப மாட்டேன். அப்பேற்பட்ட எனக்கே பலன் சொல்லி அசத்திட்டார்ணா பாத்துக்கோங்க. நான் தமிழ் நாட்டுக்காரன். அவர் ஆந்திராக்காரர். அவர் எங்கே, நான் எங்கே. நேரில் இருந்து பார்த்தது போல் பலன்களை சொல்லும் முறையில் அசத்தி விடுவார். நல்ல மனிதர். இம்புட்டு தெறம இருந்தும் கொஞ்சம் கூட பந்தா இல்லாத மனுஷன். நான் சொல்றத விட ஒங்களுக்கே தெரியும். ஒங்களால நம்பமுடியலன்னாலோ, ஜீரணிக்க முடியலன்னாலோ, நீங்களே முயற்சி பண்ணிப்பாருங்க. என்ன ரெடியா? நம் மக்கள்தான் எதையும் சாதாரணமா நம்ப மாட்டங்களே. சரி. அது போகட்டும். இந்த வெப்சைட்ட http://anubavajothidam.com/sonia-horo/ கொஞ்சம் எட்டி பாத்துட்டு போங்க. நன்றி பாஸ் (க்ளிக் பண்ண போறதுக்கு)

http://anubavajothidam.com/%E0%AE%9C%E0%AF%86-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D/

சிவா said...

உறவுகளுக்கு வணக்கம்!

மேலே ஈகரை சிவா என்ற பெயரில் உள்ள கருத்து நான் பதிந்தது அல்ல! என் பெயரில் யாரோ ஒரு விஷமி அந்தக் கருத்தைப் பதிந்துள்ளான். இன்று என் பெயரிலும் என் இணையத்தளத்தின் பெயரிலும் பல வலைப்பூக்கள் துவங்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்ற நேரத்தில் இந்தக் கருத்தையும் காண நேர்ந்தது! இதுபோன்று மின்னஞ்சல் உறுதி செய்யாமல் பின்னூட்டங்கள் இடுவதைத் தவிர்க்கலாமே அட்மின்!

நன்றி!

Post a Comment