Monday, December 27, 2010

ஜாதகம் இல்லாமல் துல்லியமான பலன் சொல்லமுடியுமா?

 வணக்கம் அன்பர்களே!
                       ஜோதிடர்களிடம் பலன் கேட்க பொதுவாக நமது 
பிறந்த ஜாதகம் தேவைபடும்.ஆனால் பிரசன்னம் பார்க்க ஜாதகம் தேவை
இல்லை. அதிலும் பிரசன்னத்தில் மிக துல்லியமான பலன்களையும்,ஏன்,
எதற்கு,எப்போது,எவ்வளவு,என எந்தவிதமான கேள்விகளுக்கும் மிக சிறப்பாக பலன்களை சிறப்பாக G.V.சிஸ்டம் மூலமாக சொல்லலாம்.

உதாரணம்.
கேள்வி: வாகனம் வாங்குவது விஷயமாக.
ஜோதிட உலகில் எத்தனையோ வழிமுறைகளில் ஜோதிடர்கள் பலன் சொல்கிறார்கள். அந்த வகையில் GV இன் பிரசன்ன முறையும் ஒன்று. உதாரணம்: 14/09/2007 காலை 09:07 மணிக்கு என்னிடம் ஒருவர் வந்தார். வந்தவருடைய நோக்கம் எது என்பதை GV சிஸ்டத்தில் மட்டுமே சொல்லமுடியும். GV சிஸ்டத்தில் முக்கியமாக பங்களிப்பது நவாம்சம் மட்டுமே.மேலும் இதனில் சுட்சமும் பயன்படுத்தி சொல்ல வேண்டும்.


செவ்





புதன் சனி
ராகு
ராசி
சுக்

நவாம்சம்
கேது

சூ சனி கேது
ல சுக் ராக
சந்

குரு
சந் பூதன்
சூ குரு


செவ்

1. வந்தவர் எதற்காக வந்தார்?
GV சிஸ்டம் படி மேற்படி ஆரூட சக்கரத்தில்
லக்னம்: துலாம் / மகரம்.
ராசி: கன்னி/ சிம்மம்/ சித்திரை.

வந்த நேரத்தில் லக்னம் சுவாதி 2 ல். சூட்சமம் சுக்ரன் ஆகிறார். சுக்ரன் அம்சத்தில் 01/05/10, குறிக்கிறார். மேலும் அவர் புதன் சாரம் பெற்று 06, 09 குறிக்கிறார். 06, கடன் 09 பாக்கியம் 10 தொழில் இவைகளை குறிக்கும். கடன் வாங்கி தொழில் செய்வதை பற்றி கேட்குறீர்களா? என்றேன்.
அவர் ஆமாம் என்றார்.

2. எந்த விதமான தொழில் செய்வது என்று கேட்டார்?
சுக்ரனின் சூட்சமம் GV சிஸ்டத்தில் செவ்வாய் ஆகும். செவ்வாய் 04, 11 ன் அதிபதி. எனவே வாகனம், உணவு தயாரிப்பு, ஆடை சம்மந்தப்பட்ட தொழில்(Tailor).  11 ம் இடம் அவரின் விருப்பத்தை குறிக்கும். ராசியில் செவ்வாய் ரிஷபத்தில் உள்ளார். கால் நடை சம்மந்தப்பட்டது என்றும் கூறினேன்.    அதற்க்கு அவர் வாகனம் சம்பந்த பட்டது என ஒப்புகொண்டார்.

3. புதிய அல்லது பழைய வாகனம் இவற்றில் எது வாங்கலாம்?
செவ்வாய் அம்சத்தில் புதன் வீட்டில், மிருகசிரீடம் 2 ல் உள்ளார். கண்ட நட்சத்திரம் எனவே பழைய வாகனம் மட்டுமே வாங்க முடியும் என்றேன். அவரும் அதையே வாங்குவதாக எண்ணினார்.

4. வாகனம் எங்கு கிடைக்கும்.
செவ்வாய் கன்னியில் உள்ளதால் தென் மேற்கில் கிடைக்கும் என்றேன். தரகர்கள் அந்த திக்கில் உள்ளதாக சொன்னார்கள். மேற்கண்ட அணைத்து கேள்விகளுக்கும் சரியான பதில் சொன்னீர்கள் என்றும் கூறினார்.

5.என்ன விலையில் வாங்கலாம்.
செவ்வாய் ராகு சூட்சமத்தில் உள்ளார். எனவே இங்கு யுக்தியும் புத்தியும் கொண்டு பலன் சொல்லவேண்டும். செவ்வாய் மிருகசிரீடத்தில் உள்ளதால் பாதி விலையாக கொள்ள வேண்டும். பிரசன்ன ஆருடத்தில் சந்திரன் முக்கிய பங்கு வைப்பார். சந்திரன் இன்றைய தினம் ஒரு பாதம் கடக்க 06:43 நிமிடம் எடுத்து கொள்வார். காலை 10:15 முதல் மாலை 04:58 வரை 2 ம் பாதத்தில் உள்ளார். சித்திரை பகை நட்சத்திரம். சித்திரையின் அளவில் ¼ பங்கு 1750.

செவ்வாய் ராகு சூட்சமத்தில் உள்ளதால் 125000.00 +1750.00= 126750.00. வாங்கலாம் என்று சொன்னேன். மேலும் வண்டியை 04:58 குள் பார்க்கலாம் என்று சொன்னேன். அதற்க்கு அவர் சரி என்று சொல்லிவிட்டு சென்றார்.
சென்றவர் எம்மிடம் Rs. 130000.00 விலை சொல்லுவதாகவும் வண்டியை மாலை 04:50 மணிக்கு தான் பார்த்ததாகவும் கூறினார். நானும் கமிஷன் உள்பட அதே தொகைக்கு வாங்க சொன்னேன்.
இவ்வளவு எளிமையாக P.H.R இன் GV system ல் பிரசன்னத்தை சொல்லமுடியும்.  
                  
               வாழ்க குருநாதர் P.H.R இன் புகழ்!!!

No comments:

Post a Comment