Friday, December 30, 2011

தமிழகத்தைப் பொருத்தவரை புத்தாண்டு 2012 எப்படி இருக்கும்


அன்புடைய ஜோதிட அபிமானிகளுக்கு 2012ம் வருடம் பற்றிய பொதுபலனாக நமது தமிழகத்தைப்பொருத்தவரை எப்படி இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாக உள்ளது.எனவே PHR ன் G.V. சிஸ்டப்படி ஆராய்ந்து விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டைப்பொருத்தவரை முதல்வர் அவர்கள் ஆட்சிப்பீட்த்தில் அமர்ந்த நேரம் கொண்டு கணிக்கப்பட்ட்து. ஏனெனில் பதவி ஏற்ற நாளில் இருந்து தான் நிர்வாகம் நடைபெறுகிறது. பதவி ஏற்ற நாளின் நேரத்தில் இன்றைய வருட பொதுப்பலனை ஆய்வு செய்து அளித்துள்ளேன்.
பதவி ஏற்ற 2011-05-16 திங்கட்கிழமை பகல் 12.47க்கு வந்த லக்னத்தை கொண்டு பலன்கூறவேண்டும்.

புதுவருடம் மார்கழி 15ம் நாள் சனி/ஞாயிறு 12.00 அம் 01.01.2012 வருட பிறப்பு. அன்றுள்ள காலகட்டத்தில் உள்ள கிரகநிலையை வைத்து, பதவி ஏற்றநாளில் உள்ள லக்னத்தையும் வைத்து பார்க்கவேண்டும். எப்படியெனில் கீழே உள்ள கிரகநிலையை பாருங்கள்.

பதவி ஏற்ற 2011-05-16 திங்கட்கிழமை பகல் 12.47க்கு வந்த லக்னம் சிம்ம்ம்/மிதுனம்
01.01.2012 வருட பிறப்பு கிரகநிலை ராசி: மீனம்/துலாம்/உத்திரட்டாதி.

ஆட்சியாளரின் சூரியனை வைத்துதான் பலன் கூறவேண்டும் (அதாவது உயிர்திசை) முதல்வரின் (J.J.) ஜாதகத்தில் சூரியன் பரணி 4ல் உள்ளார். அதன்படி தற்போது 17.06.2011 முதல் 26.07.2012 வரை சனிதிசையில் கேதுபுக்தி நடைபெறுகிறது.

இப்போது வருடபலன் ஜாதகத்தைப் பார்க்கவும். எமது P.H.R ன் G.V. சிஸ்டம் அம்சம் பிரதானம். எனவே வருடபிறப்பில் பதவி ஏற்ற லக்னம் மிதுனம். மிதுனத்தில் கேதுவுடன் சுக்கிரன் உள்ளார். 1. 4. 9.ஐ கேது குறிப்பதாலும் அது திசா நாதன் சனிக்கு 8ல் மறைவதாலும் பல இன்னல்களுக்கு ஆளாகநேரிடும்.

7ம் இடஅதிபதி குரு, கேதுசாரம் பெறுவதும், கேது சந்திரன் சாரம் பெறுவதால் எதிரிகள்,அனுகூல சத்ருக்கள் மூலம் மனவலிமையை இழக்கநேரிடும் வாய்ப்பு உண்டு.

ஆனால் 26.07.2012 க்கு பின்பு சுக்கிரன் புக்தி ஆரம்பம் ஆவதால் சுக்ரன் தன் வீடான 5,மற்றும் 12ம் பாவத்திற்கு வலிமைச்சேர்க்கிறார். 5ம்வீட்டிற்கு 3லும், 12ம்வீட்டிற்கு 2லும், அமர்வு சிறப்பு உண்டு. சுக்ரன், சந்திரன் சாரம் பெற்று,5ம் வீட்டை குறிப்பதால் முரட்டு தைரியத்தைக் கொடுப்பார். தான் நின்ற வீட்டின் அதிபதி புதன் கும்பத்தில் சுயசாரம் ஏறியதால் உயரிய பதவிகள் தேடிவரும்.

9, 10, 11, இடங்கள் ஆட்சிக்கு முக்கியமானது. லக்னத்திற்கு 12ல் குரு இருந்தாலும் காலசக்கரத்திற்கு அது 2ம் இடம். எனவே இந்தியாவைப் பொருத்து 2வது தலைமையிடம் அமையும். தமிழ்நாட்டிற்கு மகரம் ராசி ஆகும். மகரத்திற்கு 11ல் சனி,செவ், கூடியுள்ளதால் விவசாய துறையில் தொய்வு ஏற்ப்பட்டு விலகும். எதிரணியினர் மீண்டும் ஒன்று சேர்ந்து கூட்டணியாக பாராளுமன்ற தேர்தலைச் சந்திப்பார்கள்.விவசாய துறையில் புதிய கண்டுப்பிடிப்புகள் வெளிவரும்.  

11ல், மாந்தி இருப்பதாலும், அதன் அதிபதி செவ்வாய், சனியுடன் கூடி இருப்பதால் ஓய்வு பெற்ற I.A.S.,  I.P.S., அதிகாரிகள் கொண்ட சிறப்பான குழு ஒன்றை ஆரம்பிக்கவேண்டி வரும். இக்குழு மூலம் சில முடிவுகள் தமிழகத்திற்கு சாதகமாக அமையும். தற்சமயம் உள்ள வழக்குகள் மேல்முறையீடு செய்யப்படும், தண்டனை கிடையாது.

திசாநாதன் சனிக்கு 1, 4, 7, 10,ல் கிரகம் வலுத்து சதுர்கேந்திர யோகம் எனவே தமிழக சர்க்காருக்கு சரிசமமான பலன்கள் தான் நடைபெறும். ஜெ.ஜெ.அவர்களின் லக்னாதிபதி சூரியன், புதுவருட பிறப்பில் சுக்ரன் சாரம் பெறுகிறார். மேலும் அவர் ஜெ.ஜெ. லக்னத்திற்கு 10ன் அதிபதியாகி மகரத்தில் உள்ளார். புதுவருட லக்னம் மிதுனம். சந்திரன் கடகராசி அதிபதி வாக்காளர்களைக் குறிக்கும். எனவே மக்களின் ஆதரவு எப்போதும் உண்டு. 

தலைநகர லக்னம் மேஷம்,அதிபதி செவ்வாய் சனியுடன் கூடி 8ல் உள்ளார்கள்.ரவுடியிசம்,தீவிரவாதம், கொலை,கொள்ளை, கடுமையாக அடக்கப்படும். 7ம் இடம் நட்பு இங்கு ராகு உள்ளார். இவர் கோதண்டராகு ஆவார். இவர் நல்ல நண்பர்களையும், நல்ல ஆலோசகர்களையும் அறிமுகப்படுத்துவார். புதன் கேட்டை நட்சத்திரம்,அதிதேவதை இந்திரன். இந்திரன் எனமுடியும் பெயருடைய நபர்களால் அனுகூலம் உண்டு.

ஜெ.ஜெ. அவர்கள் தனது ஆட்சியில் இவ்வருடம் முடியும் தருவாயில் எல்லோரும் வியக்கும் வகையில் முன்னேற்றம் காண்பார்கள்.

எல்லாம் வல்ல ஸ்ரீபகவதியின் அருள் 
மக்களுக்கும்,ஆட்சியாளர்களுக்கும் 
கிடைக்கட்டும் என பிரார்த்திக்கும் 

ஜோதிடர் G.V ஷர்மா.சேலம். 
 2011.12.21.

4 comments:

சுந்தரேசன் said...

//எதிரணியினர் மீண்டும் ஒன்று சேர்ந்து கூட்டணியாக பாராளுமன்ற தேர்தலைச் சந்திப்பார்கள்.//

இதில் "எதிரணியினர்" என்ற வார்த்தை யாரைக்குறிக்கும்?

திமுகவையா? அல்லது சசி அண்ட் கோ.வையா? புரியவில்லையே!

சுந்தரேசன் said...

//இந்திரன் எனமுடியும் பெயருடைய நபர்களால் அனுகூலம் உண்டு.//

நீங்கள் குறிப்பிட்ட நான்கு கரங்கள், கரங்களில் சுழல் சக்கரம்,கதாயுதம் மற்றும் இதர கவச குண்டலங்களுடன் உள்ள "அந்த" இந்திரன் வேறு யாருமல்ல சாட்சாத் நம்ம நரேந்திரமோடி அண்ணன்தேன். நரேந்திரமோடி கையிலதேன் இப்ப சங்கு சக்க்ரம்லாம் சுத்திக்கிட்டு இருக்கு. அவர ஜூம் பண்ணுங்க.

சுந்தரேசன் said...

//ஜெ.ஜெ. அவர்கள் தனது ஆட்சியில் இவ்வருடம் முடியும் தருவாயில் எல்லோரும் வியக்கும் வகையில் முன்னேற்றம் காண்பார்கள்.//

ஏற்கனவே சொன்னீங்கல்லா, அந்த பிரதமர் பதவியத்தானே இப்பிடி சூசகமா சொல்றீங்க. ஓக்கே டன்.

சுந்தரேசன் said...

அண்ணே!

புது வருஷம் அதுவுமா நல்ல சேதிய போடுங்கணே.

வர்ட்டா..

Post a Comment