Wednesday, August 11, 2010

நம்பிக்கை வாக்கெடுப்பில் PM வெற்றி பெறுவாரா?

ஜோதிடர் நண்பர்கள் மற்றும் ஜோதிட மாணவர்கள் இவர்கள் அனைவர்க்கும் இத்தலைப்பு ஓர் அதிசயம். நம்நாட்டில் வடகோடியில் நடக்க இருக்கிற சம்பவம். இதை கூட பிரசன்னத்தில் சொல்ல முடியுமா? ஏன் முடியாது.சில வினாடியில் நடக்கவிருக்கும் சம்பவத்தை சொல்லும் போது, சிலமணி நேரத்தில் நடக்கும் சம்பவத்தை  PHR – in GV – system மூலம்தான் சொல்லமுடியும். வழக்கம்போல் தேர்தல்,அது MP, MLA, MC இதுபோன்ற தேர்தல் வந்துவிட்டால் எல்லோர்க்கும் யார் வெற்றிபெறுவார்கள் என்று தெரிந்துகொள்ள ஆசை இருக்கும். எனவே தலைப்பில் உள்ள விஷயத்தை தெரிந்துகொள்ள ஆவலாய் இருப்பது நியாயம்தான். 


என்னிடம் கேள்வி கேட்டவர் என் மாணவர்களின் ஒருவர் கேள்விகேட்ட நாள் 2008-07-21.07:38PM. PHR-in-GV system-தில் அம்சம் பிரதானம் என்பதால் கிழே கொடுக்கப்பட்ட கிரகநிலைகளை கவனிக்கவும்.




பு



பு




சந்
ராசி
சுக் சூ கே
கே
அம்சம்
சனி ல



ல ராகு
சனி செ
சந்
ராகு சூ



குரு (வ)



சுக்

குரு (வ)
செ




லக்னம் : மகரம் / கடகம்
ராசி :  கும்பம் / மகரம் / சதயம்


வெற்றிக்கு உண்டான பாவம் கன்னி, அதிபதி புதன், 11 – ல் இருக்கிறார். செவ்வாய் சுக்கிரன் சாரம். 11 – இன் அதிபதி 6 – ல் உள்ளதால், வெற்றி உறுதி.

லக்னத்திற்கு பாதகாதிபதி, பாதக ஸ்தானத்திற்கு 8 – ல் மறைவது நன்மை. மேலும் வெற்றி ஸ்தானத்தில் இருந்து செவ்வாய் பார்வை வேறு உள்ளது. ஆகவே PM கண்டிப்பாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவார் என்று கூறப்பட்டது.

எவ்வளவு வோட்டு வாங்குவார்

சுக்ரன் பதினோராம் வீட்டின் அதிபதி, விருப்பத்தை குறிக்கும் இடம். சுக்ரன் புதன் சாரம். சுக்க்ரனுக்கு புதன் பாசகன் ( தேடுவதை கிடைக்க செய்பவர்). எனவே புதனின் காலம் பதினேழு வருடத்தை, பதினேழு வோட்டு எனவும் PHR – in GV – system-தில் சந்திரனின் ஓட்டம் முக்கியம். சந்திரன் சதய நட்சத்திரத்தில் சூச்சமம் குருவாக உள்ளார். மேலும் குரு கண்ட நட்சத்திரத்தில் வக்கிரம். குருவின் வருடம் பதினாறு. அதில் எட்டில் ஒரு பங்கு இரண்டு வோட்டு. PM கண்டிப்பாக 17+2=19 வோட்டு வாங்கி வெற்றி பெறுவார் என கூறப்பட்டது. அன்று இரவு முக்கிய செய்தியில் PM மேற்படி வோட்டில் ஜெயித்தார் என வந்தது. என்னிடம் ஜோதிடம் பயிலும் மாணவர்களுக்கும், கேள்வி கேட்டவர்களுக்கும் அதிசயமாக இருந்தது. எல்லாம் வல்ல ஸ்ரீ பகவதியின் கருணையும் எனது குருநாதர் PHR அவர்களின் ஆசியும் இதற்கு காரணமாக இருந்தது.

வாழ்க குருநாதர் புகழ்!!! வளர்க ஜோதிடகலை!!!
சுபம்!!!

3 comments:

Anonymous said...

ஐயா,
நீங்க சொல்றது எல்லாம் சரிதான். கேக்குறதுக்கும் செவிகளுக்கு இனிமையாத்தான் இருக்கு. அது போகட்டும். தமிழ்நாட்டுல வரப்போகிற 2011 சட்டமன்ற தேர்தல்ல யாரு ஜெயிப்பான்னு நீங்க சொன்னீங்கன்னா அது வாஸ்தவமான பேச்சு. அத விட்டுட்டு நீங்க முடிஞ்சு போன கதைய இப்ப கொண்டு வந்து நான் சொன்னது நடந்துட்டு, நான் சொன்னது பலிச்சிட்டுன்னு நீங்க சொல்றது செத்த பாம்ப அடிச்ச கதை மாதிரி தோணுது. தங்களை புண்படுத்தும் நோக்கத்தில் கூறவில்லை.

Anonymous said...

கதையெல்லாம் இருக்கட்டும். வரப்போகிற கதைய பத்தி ஒங்க பட்சி என்ன சொல்லுதுன்னு சொல்லுங்க பாஸ்.

ஈகரை சிவா said...

இப்படியே ஊரை ஏமாத்திட்டு அலைங்க.

Post a Comment